PAT 2.6.1

காக்கையை கண்ணனுக்குக் கோல் கொண்டுவர விளம்புதல் காலிப்பின் போகிறவன்

172 வேலிக்கோல்வெட்டி விளையாடுவில்லேற்றி *
தாலிக்கொழுந்தைத் தடங்கழுத்தில்பூண்டு *
பீலித்தழையைப் பிணைத்துப்பிறகிட்டு *
காலிப்பின்போவாற்குஓர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா. (2)
172 ## velik kol vĕṭṭi * vil̤aiyāṭu vil eṟṟi *
tālik kŏzhuntait * taṭaṅkazhuttil pūṇṭu **
pīlit tazhaiyaip * piṇaittup piṟakiṭṭu *
kālip piṉ povāṟku or kol kŏṇṭu vā * kaṭal niṟa vaṇṇaṟku or kol kŏṇṭu vā (1)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

172. O crow, He cuts sticks from the fences, makes arrows and plays with the boys. He wears a chain with on his round neck and his head is adorned with peacock feathers. Bring a grazing stick for him as he goes behind the cattle, Bring a grazing stick for the one colored like the blue ocean.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேலி வேலி ஓரம் வளர்ந்திருக்கும்; கோல் செடிகளின் கொம்பை; வெட்டி வெட்டி எடுத்து; விளையாடு விளயாடுவதற்கு; வில் ஏற்றி வில்லாக்கி நாண் ஏற்றி; தாலி பனையின்; கொழுந்தை குறுத்துகளை மாலையாக; தடங்கழுத்தில் தன் பெரியகழுத்திலே; பூண்டு அணிந்துகொண்டு; பீலித் தழையை மயில் பீலித் தோகைகளை; பிணைத்து சேர்த்து; பிறகிட்டு முதுகில் கட்டி கொண்டு; காலிப் பின் கன்றுகளின் பின்னே; போவாற்கு மேய்க்கச் செல்பவனுக்கு; ஓர் கோல் கொண்டு வா ஒரு கோலைக் கொண்டுவா; கடல் நிற வண்ணற்கு நீலவண்ணனுக்கு; ஓர் கோல் கொண்டு வா ஒரு கோலைக் கொண்டுவா
vĕṭṭi He cuts and brings; kol the sticks from plants that; veli grows near the fences; vil̤aiyāṭu to play; vil eṟṟi as bows and arrows; pūṇṭu He wears; tāli a sacred ornament; kŏḻuntai as a garland; taṭaṅkaḻuttil on His big neck; piṟakiṭṭu and tied on Himself; piṇaittu bunched; pīlit taḻaiyai peacock feathers; povāṟku the One who goes; kālip piṉ behind the cattle; or kol kŏṇṭu vā bring a grazing stick for Him; kaṭal niṟa vaṇṇaṟku for the One colored like the blue ocean; or kol kŏṇṭu vā bring a grazing stick for Him