PAT 2.4.9

நப்பின்னை சிரிப்பாளே

160 பூணித்தொழுவினில்புக்குப் புழுதியளைந்தபொன்மேனி *
காணப்பெரிதும்உகப்பன் ஆகிலும்கண்டார்பழிப்பர் *
நாணெத்தனையுமிலாதாய்! நப்பின்னைகாணில்சிரிக்கும் *
மாணிக்கமே! என்மணியே! மஞ்சனமாடநீவாராய்.
160 pūṇit tŏzhuviṉil pukkup * puzhuti al̤ainta pŏṉ-meṉi *
kāṇap pĕritum ukappaṉ * ākilum kaṇṭār pazhippar **
nāṇ ĕttaṉaiyum ilātāy * nappiṉṉai kāṇil cirikkum *
māṇikkame ĕṉ maṇiye * mañcaṉam āṭa nī vārāy (9)

Ragam

Bilahari / பிலஹரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

160. I may be happy to see your golden body smeared with dirt because you went into the shed where the cows are tied, played with them and made yourself dirty, but others will blame me when they see you. You are shameless! If Nappinnai sees you, she will laugh. O my diamond, my jewel, come and bathe in the fragrant turmeric water.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பூணித் தொழுவினில் புக்கு மாட்டுத் தொழுவத்தில் சென்று; புழுதி அளைந்த புழுதி படிந்த; பொன்மேனி காண பொன்மேனியைப் பார்க்க; பெரிதும் உகப்பன் மிகவும் உகப்பேன்; ஆகிலும் கண்டார் ஆனாலும் பார்ப்பவர்கள்; பழிப்பர் கேலி செய்வர்; நாண் எத்தனையும் வெட்கம் எதுவும்; இலாதாய்! இல்லாதவனே; நப்பின்னை காணில் நப்பின்னை பார்த்தால்; சிரிக்கும் சிரிப்பாள்; மாணிக்கமே! என் மணியே! மாணிக்கமே கண்மணியே!; மஞ்சனம் ஆட நீ வாராய் நீராட நீ வாராய்
pĕritum ukappaṉ I am very happy to see Your; pŏṉmeṉi kāṇa golden complexion; puḻuti al̤ainta covered with dust; pūṇit tŏḻuviṉil pukku that came from playing in the the cow shed; ākilum kaṇṭār but others will; paḻippar make fun of You; ilātāy! You do not have; nāṇ ĕttaṉaiyum any shame; nappiṉṉai kāṇil If Nappinnai sees You; cirikkum she will laugh; māṇikkame! ĕṉ maṇiye! O my diamond, my jewel!; mañcaṉam āṭa nī vārāy come and bathe