PAT 2.4.3

திருமஞ்சனநீர்

154 பேய்ச்சிமுலையுண்ணக்கண்டு பின்னையும்நில்லாதுஎன்னெஞ்சம் *
ஆய்ச்சியரெல்லாரும்கூடி அழைக்கவும்நான்முலைதந்தேன் *
காய்ச்சினநீரொடுநெல்லி கடாரத்தில்பூரித்துவைத்தேன் *
வாய்த்தபுகழ்மணிவண்ணா! மஞ்சனமாடநீவாராய்
154 peycci mulai uṇṇak kaṇṭu * piṉṉaiyum nillātu ĕṉnĕñcam *
āycciyar ĕllārum kūṭi * azhaikkavum nāṉ mulai tanteṉ **
kāycciṉa nīrŏṭu nĕlli * kaṭārattil pūrittu vaitteṉ *
vāytta pukazh maṇivaṇṇā * mañcaṉam āṭa nī vārāy (3)

Ragam

Bilahari / பிலஹரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

154. Even after seeing you drink the poisoned milk from the devil Poothana's breasts, I came to feed you milk when all the cowherd women called me. I’ve boiled water with gooseberry and filled a large pot with it. You have the color of a sapphire and are praised by all— come to bathe in the water mixed with turmeric.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேய்ச்சி முலை பூதனையிடம் பாலை; உண்ண பருகி அவளை மாளச் செய்ததை; கண்டு பின்னையும் பார்த்த பின்பும்; நில்லாது என் நெஞ்சம் என் மனம் கேளாமல்; ஆய்ச்சியர் ஆய்ச்சியர்; எல்லாம் கூடி எல்லாரும் ஒன்று கூடி; அழைக்கவும் குரல் கொடுத்ததனால்; நான் முலை தந்தேன் நான் உனக்குப் பால் கொடுத்தேன்; காய்ச்சின நீரொடு சூடான நீரில்; நெல்லி நெல்லிக்காயைப் போட்டு; கடாரத்தில் பூரித்து தாழியில்; வைத்தேன் வைத்திருக்கிறேன்; வாய்த்த புகழ் பெரும் புகழையுடையவனே!; மணிவண்ணா! நீலமணி போன்ற கண்ணனே!; மஞ்சனம் ஆட நீ வாராய் நீராட நீ வாராய்
kaṇṭu piṉṉaiyum even after seeing; uṇṇa You killed putana; peycci mulai by drinking her milk; nillātu ĕṉ nĕñcam i immediately; nāṉ mulai tanteṉ came and gave You milk; āycciyar when Aiyarpadi residents; ĕllām kūṭi all came together; aḻaikkavum and called me; nĕlli I have put gooseberry; kāycciṉa nīrŏṭu in hot water; vaitteṉ and kept it in; kaṭārattil pūrittu a pot; vāytta pukaḻ You are praised by all!; maṇivaṇṇā! Oh Kanna who is like a sapphire; mañcaṉam āṭa nī vārāy come to bathe