PAT 2.4.10

கார்மேனிக் கண்ணபிரான்

161 கார்மலிமேனி நிறத்துக் கண்ணபிரானையுகந்து *
வார்மலிகொங்கையசோதை மஞ்சனமாட்டியவாற்றை *
பார்மலிதொல்புதுவைக்கோன் பட்டர்பிரான்சொன்ன பாடல் *
சீர்மலிசெந்தமிழ்வல்லார் தீவினையாதுமிலரே. (2)
161 ## kār mali meṉi niṟattuk * kaṇṇapirāṉai ukantu *
vār mali kŏṅkai yacotai * mañcaṉam āṭṭiya āṟṟaip **
pār mali tŏl putuvaik koṉ * paṭṭarpirāṉ cŏṉṉa pāṭal *
cīr mali cĕntamizh vallār * tīviṉai yātum ilare (10)

Ragam

Bilahari / பிலஹரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

161. Vishnuchithan the chief of old Puduvai, praised by all the worlds, composed pāsurams describing how Yashodā fondly called the dark complexioned Kannan to come bathe in fragrant turmeric water. Those who learn these excellent Tamil pāsurams will be free from all ills.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கார் மலி மேனி நிறத்து மேகம் போன்ற் மேனியுடய; கண்ண பிரானை உகந்து கண்ணபிரானை ஆசையுடன்; வார் மலி கொங்கை யசோதை அழகு மிக்க யசோதை; மஞ்சனம் ஆட்டிய ஆற்றை நீராட்டிய விதத்தை; பார் மலி தொல் பார்புகழ் பெற்ற; புதுவைக் கோன் ஸ்ரீவில்லலிபுத்தூர் பெருமான்; பட்டர் பிரான் சொன்ன பெரியாழ்வார் அருளிய; பாடல் பாடல்களின்; சீர் மலி செந்தமிழ் சீர்மிக்க செந்தமிழை; வல்லார் ஓத வல்லவர்கள்; தீவினை யாதும் இலரே எவ்வித தீவினையும் அற்றவரே!
vallār those who recite; pāṭal these pasurams in; cīr mali cĕntamiḻ beautiful Tamil language; paṭṭar pirāṉ cŏṉṉa composed by Periazhwar; pār mali tŏl the reputed; putuvaik koṉ chief of SriVilliputhur; vār mali kŏṅkai yacotai depicting how mother Yashoda; kaṇṇa pirāṉai ukantu called Kannan; kār mali meṉi niṟattu with a cloud like complexion; mañcaṉam āṭṭiya āṟṟai to come and bathe; tīviṉai yātum ilare will be free from all ills!