PAT 2.3.1

பன்னிரு நாமங்கள் : காது குத்தல் கேசவ நம்பி கண்ணன்

139 போய்ப்பாடுடையநின்தந்தையும்தாழ்த்தான்
பொருதிறல்கஞ்சன்கடியன் *
காப்பாருமில்லைகடல்வண்ணா! உன்னைத்
தனியேபோய்எங்கும்திரிதி *
பேய்ப்பால்முலையுண்டபித்தனே!
கேசவநம்பீ! உன்னைக்காதுகுத்த *
ஆய்ப்பாலர்பெண்டுகளெல்லாரும்வந்தார்
அடைக்காய்திருத்திநான்வைத்தேன். (2)
139 ## poyppāṭu uṭaiya niṉ tantaiyum tāzhttāṉ * pŏru tiṟal kañcaṉ kaṭiyaṉ *
kāppārum illai kaṭalvaṇṇā uṉṉait * taṉiye poy ĕṅkum tiriti **
peyppāl mulai uṇṭa pittaṉe * kecava nampī uṉṉaik kātu kutta *
āyp pālar pĕṇṭukal̤ ĕllārum vantār * aṭaikkāy tirutti nāṉ vaitteṉ (1)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

139. Your father has not yet returned home. Kamsan, the strong, brave fighter is angry with you. You, with your beautiful blue ocean-colored body, wander around everywhere alone. and there is no one to protect you from him. You, the crazy one, drank milk from the devil Putanā's breasts. O Kesava! All the cowherd women have gathered here for your ear boring ceremony. I have prepared betel leaves and nuts to give them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
போய்ப்பாடு உடைய வெளியே சென்றுள்ள; நின் தந்தையும் உன் தகப்பனும்; தாழ்த்தான் இன்னும் வராமல் காலம் தாழ்த்துகிறான்; பொரு திறல் போர்த்திறமையையுடைய; கஞ்சன் கம்சன் உன்னிடம்; கடியன் கடுமை கொண்டுள்ளான்; கடல்வண்ணா! கடல் நிறக் கண்ணனே!; காப்பாரும் நம்மை காப்பவர்; இல்லை யாரும் இல்லை நீயோவெனில்; தனியே போய் தனியாகப் போய்; எங்கும் திரிதி எங்கும் திரிகிறாய்; பேய்ப் பால் முலை பூதனை எனும் பேயின் பாலைப்; உண்ட பித்தனே! பருகினவனே!; கேசவ நம்பீ! கேசவ பிரானே!; உன்னைக் காது குத்த உன் காதில் துளையிட; ஆய்ப் பாலர் ஆயர்பாடி சிறுவர்களும்; பெண்டுகள் பெண்கள்; எல்லாரும் வந்தார் எல்லாரும் வந்துள்ளர்கள்; அடைக்காய் திருத்தி வெற்றிலை பாக்குகளை; நான் வைத்தேன் ஆய்ந்து தயாராக வைத்திருக்கிறேன்
niṉ tantaiyum Your father; tāḻttāṉ and is yet to come; kañcaṉ Kamsan; pŏru tiṟal the war fighter; kaṭiyaṉ is angry with You; kaṭalvaṇṇā! Oh blue ocean colored Kannan!; kāppārum to protect us; illai there is no one; taṉiye poy You have gone out alone; ĕṅkum tiriti and wander around; uṇṭa pittaṉe! You drank!; peyp pāl mulai the milk of the devil Putana; kecava nampī! Oh Keshava!; uṉṉaik kātu kutta for Your ear piercing ceremony; āyp pālar the children of Aiyarpadi and; pĕṇṭukal̤ the women; ĕllārum vantār have come; aṭaikkāy tirutti I have kept the betel leaves and nuts; nāṉ vaitteṉ examined and ready; poyppāṭu uṭaiya has gone outside