PAT 2.10.6

தளர்நடையிட்ட இளம்பிள்ளை

218 தள்ளித்தளர்நடையிட்டு இளம்பிள்ளையாய் *
உள்ளத்தினுள்ளே அவளையுறநோக்கி *
கள்ளத்தினால்வந்த பேய்ச்சிமுலையுயிர் *
துள்ளச்சுவைத்தானால்இன்றுமுற்றும்
துவக்கறவுண்டானால்இன்றுமுற்றும்.
218 tal̤l̤it tal̤ar naṭai yiṭṭu * il̤am pil̤l̤aiyāy *
ul̤l̤attiṉ ul̤l̤e * aval̤ai uṟa nokki **
kal̤l̤attiṉāl vanta * peycci mulai uyir *
tul̤l̤ac cuvaittāṉāl iṉṟu muṟṟum * tuvakku aṟa uṇṭāṉāl iṉṟu muṟṟum (6)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

218. O Yashodā, even as a baby, toddling with his tiny feet, He sensed the devil Putanā's wicked intentions to trick him and try to kill him. When she came, he sucked the poisonous milk from her breasts and her life too. We think that was good, but he stole our clothes, stays on the top of the tree and refuses to give them back. This isn’t fair.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தள்ளித் தட்டுத்தடுமாறி; தளிர் நடையிட்டு தளிர் நடை நடந்து; இளம் பிள்ளையாய் சிறுவனாக இருக்கும்போதே; உள்ளத்தின் உள்ளே நம்மை முடிக்க வருகிறாள் இவள்; அவளை உற நோக்கி என்று தன் மநஸ்ஸினுள்ளே எண்ணி; கள்ளத்தினால் கெட்ட எண்ணத்தோடு; வந்த பேய்ச்சி பேய்ச்சியின்; முலை உயிர் தாய்ப்பாலை உயிர் பிரியுமளவு; துள்ள அவள் துடிதுடிக்கும்படி; சுவைத்தானால் கண்ணன் சுவைத்ததனால்; இன்று முற்றும் இன்று முடிந்தோம்; துவக்கு அற தனக்கு எந்தவித பாதிப்பும் நேராதபடி; உண்டானால் பூதனை என்ற அரக்கியை முடித்தான் கண்ணன்; இன்று முற்றும் இன்று முடிந்தோம்
il̤am pil̤l̤aiyāy even when He was young; tal̤l̤it toddling and; tal̤ir naṭaiyiṭṭu crawling; aval̤ai uṟa nokki He sensed; kal̤l̤attiṉāl the cruel intentions; vanta peycci of Putana; ul̤l̤attiṉ ul̤l̤e who came to kill Him; cuvaittāṉāl Kannan; mulai uyir by sucking the milk also sucked; tul̤l̤a her life; iṉṟu muṟṟum we are done; tuvakku aṟa withour Him getting any harm; uṇṭāṉāl Kannan killed Putana; iṉṟu muṟṟum we are done