PAT 2.10.4

மழை தடுத்து ஆனிரை காத்தவன்

216 தேனுகனாவி செகுத்து * பனங்கனி
தானெறிந்திட்ட தடம்பெருந்தோளினால் *
வானவர்கோன்விட வந்தமழைதடுத்து *
ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும்
அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும்.
216 teṉukaṉ āvi cĕkuttup * paṉaṅkaṉi
tāṉ ĕṟintiṭṭa * taṭam pĕruntol̤iṉāl *
vāṉavar koṉ viṭa * vanta mazhai taṭuttu **
āṉirai kāttāṉāl iṉṟu muṟṟum *
avai uyyak kŏṇṭāṉāl iṉṟu muṟṟum (4)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

216. O Yashodā, your son decided to kill the Asuran Thenuhan, and hurled his body at the tree, and made the fruits of the palmyra tree fall. When Indra made sky pour heavily on the cattle, he lifted the Govardhanā mountain in his broad shoulders the cows. We think that was good, but he stole our clothes, stays in the top of the tree, and refuses to give them back. This isn’t fair.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேனுகன் தேனுகாசுரனை; ஆவி செகுத்து உயிரை முடிக்க நினைத்த கண்ணன்; பனங்கனி பழங்கள் அனைத்தும் உதிருமளவு; தான் எறிந்திட்ட வீசி எறிந்த கண்ணன்; தடம் பெருந் தோளினால் வலிமைமிக்க தோளினாலே; வானவர் கோன் விட தேவேந்திரன் ஏவி விட்ட; வந்த மழை கன மழையை; தடுத்து கோவர்தனகிரியை எடுத்து தடுத்து; ஆநிரை பசுக்கூட்டத்தை; காத்தானால் காப்பாற்றிய கண்ணனால் நாங்கள்; இன்று முற்றும் இன்று முடிந்தோம்
āvi cĕkuttu Kannan killed; teṉukaṉ Asuran Thenuhan; tāṉ ĕṟintiṭṭa and threw him at a tree; paṉaṅkaṉi that made the fruits fall; vāṉavar koṉ viṭa when Indra made the; vanta maḻai sky pour heaviliy; taṭuttu He lifted the Govardanagiri hill; taṭam pĕrun tol̤iṉāl with His broad shoulders; kāttāṉāl to protect; ānirai the cows; iṉṟu muṟṟum Because of Him we are done