PAT 2.10.1

அயலகத்தார் முறையீடு காற்றிற் கடியன்

213 ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை *
சேற்றாலெறிந்து வளைதுகில்கைக்கொண்டு *
காற்றின்கடியனாய் ஓடிஅகம்புக்கு *
மாற்றமும்தாரானால்இன்றுமுற்றும்
வளைத்திறம்பேசானால்இன்றுமுற்றும். (2)
213 ## āṟṟil iruntu * vil̤aiyāṭuvoṅkal̤ai *
ceṟṟāl ĕṟintu * val̤ai tukil kaikkŏṇṭu **
kāṟṟil kaṭiyaṉāy * oṭi akam pukku *
māṟṟamum tārāṉāl iṉṟu muṟṟum val̤ait tiṟam pecāṉāl iṉṟu muṟṟum (1)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

213. O Yashodā, when we were bathing and playing in the river Yamuna, your son threw mud at us. He stole our bracelets and clothes and ran faster than the wind and hid in his house. When we asked for our clothes and bangles he didn’t answer. This isn’t fair. If he doesn’t give us our bangles it isn’t fair.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆற்றில் இருந்து யமுனையாற்றின் கரையில்; விளையாடு விளையாடிக்கொண்டிருந்த; வோங்களை எங்கள் மேல்; சேற்றால் எறிந்து சேற்றை வாரி இறைத்து; வளை எங்கள் வளையல்களையும்; துகில் துணிமணிகளையும்; கைக் கொண்டு வாரி எடுத்துக்கொண்டு; காற்றின் கடியனாய் காற்றைக்காட்டிலும் வேகமாக; ஓடி அகம் ஓடி வீட்டுக்குள்; புக்கு ஒளிந்தான் கண்ணன்; மாற்றமும் எங்கள் பொருட்களை கேட்டும் ஒரு பதிலும்; தாரானால் கூறாமல் இருந்ததனால்; இன்று இன்றோடு; முற்றும் முடிந்தோம் என்று வருந்தினோம்; வளைத்திறம் பொருட்களை தருகிறேன் தரமாட்டேன்; பேசானால் என்று ஒரு பதிலும் கூறாமல் இருந்ததனால்; இன்று முற்றும் இன்றோடு முடிந்தோம் என்று வருந்தினோம்
ceṟṟāl ĕṟintu your Son threw soil and mud; voṅkal̤ai at us; vil̤aiyāṭu when we were playing; āṟṟil iruntu on the banks of the yamuna river; kaik kŏṇṭu He took away; val̤ai our bangles; tukil and clothes; kāṟṟiṉ kaṭiyaṉāy and ran faster than wind; oṭi akam into the house; pukku and hid himself; māṟṟamum when asked for our items He didnt answer; tārāṉāl therefore; iṉṟu from today; muṟṟum we were sorry we were done; pecāṉāl since He didnt say; val̤aittiṟam whether He will return the items or not; iṉṟu muṟṟum we were sorry we were done