PAT 1.4.4

சக்கரக்கையன்

57 சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து *
ஒக்கலைமேலிருந்து உன்னையேசுட்டிக்காட்டும்காண் *
தக்கதறிதியேல் சந்திரா! சலம்செய்யாதே *
மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய்.
57 cakkarak kaiyaṉ * taṭaṅkaṇṇāl malara vizhittu *
ŏkkalaimel iruntu * uṉṉaiye cuṭṭik kāṭṭum kāṇ **
takkatu aṟitiyel * cantirā calam cĕyyāte *
makkaṭ pĕṟāta * malaṭaṉ allaiyel vā kaṇṭāy (4)

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.4.4

Simple Translation

57. My son opens his flower-like eyes wide and calls you, pointing to you with his sweet fingers, as I hold him on my waist, O bright moon, if you know what is good for you, don’t play tricks. You aren’t someone who doesn’t know how precious a child is. Come and see him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சக்கரக் கையன் திருவாழியை கையில் தரித்தவன்; தடங்கண்ணால் விசாலமான கண்களாலே; மலர விழித்து நன்கு பார்த்து; ஒக்கலைமேல் இருந்து என் இடுப்பில் இருந்துகொண்டு; உன்னையே உன்னையே; சுட்டிக் காட்டும்காண் சுட்டிக் காட்டுகிறான் பார்; தக்கது அறிதியேல் தகுந்ததை அறிந்தவனாகில்; சந்திரா சந்திரனே!; மக்கள் பெறாத பிள்ளை பெறாத; மலடன் அல்லையேல் மலடனாக இல்லாவிடில்; சலம் செய்யாதே கபடம் காட்டாமல்; வா கண்டாய் வந்து நிற்பாய்!
cakkarak kaiyaṉ the One who holds the sacred Tulsi in his hand; malara viḻittu sees clearly; taṭaṅkaṇṇāl with his wide eyes; ŏkkalaimel iruntu from my waist; cuṭṭik kāṭṭumkāṇ and points out at; uṉṉaiye you; cantirā o moon!; takkatu aṟitiyel if you are one who knows what is appropriate; makkal̤ pĕṟāta you are not childless; malaṭaṉ allaiyel and barren; calam cĕyyāte so without any pretense; vā, kaṇṭāy come and stand here!