PAT 1.2.7

பரமனின் திருமருங்கு (இடுப்பு)

29 இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை *
பருங்கிப் பறித்துக் கொண்டோடும் பரமன்தன் *
நெருங்குபவளமும் நேர்நாணும் முத்தும் *
மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்துகாணீரே.
29 iruṅkai matakal̤iṟu * īrkkiṉṟavaṉai *
paruṅkip paṟittuk * kŏṇṭu oṭum paramaṉtaṉ **
nĕruṅku paval̤amum * nernāṇum muttum *
maruṅkum iruntavā kāṇīre * vāṇutalīr vantu kāṇīre (7)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.2.7

Simple Translation

29. He is the one, the supreme God who slew the mighty-trunked rutting elephant Kuvalayāpeedam and the mahout, plucked its ivory tusks and forged towards Kamsa's palace. O girls with shining foreheads, come and see his waist adorned with strings of coral and beautiful pearls. See his waist, come and see.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இருங்கை பெரிய துதிக்கையையுடைய; மதகளிறு மத்தகஜமான குவலயாபீடத்தை; ஈர்க்கின்றவனை தன்வசம் ஈர்க்கின்ற பாகனை; பருங்கி கொன்று; பறித்து யானையின் கொம்புகளை முறித்துக்; கொண்டு கொண்டு; ஓடும் கம்சனிருக்கும் இடத்தைத் தேடி ஓடுகின்ற; பரமன்தன் பரமனான கண்ணனுடைய; நெருங்கு அடர்த்தியாகக் கோர்த்த; பவளமும் பவழ வடமும்; நேர்நாணும் நேர்த்தியான அரைஞாணும்; முத்தும் முத்து வடமும்; மருங்கும் இருந்தவா இலங்கும் அழகைக்; காணீரே காண வாரீர்; வாணுதலீர்! ஒளிமிக்க நெற்றியையுடைய பெண்களே!; வந்து காணீரே! வந்து பாரீர்!
vāṇutalīr! o women with radiant foreheads!; kāṇīre come to see!; paramaṉtaṉ the divine Krishna who; paruṅki killed; paṟittu and plucked the tusks of; matakal̤iṟu the majestic elephant known as Kuvalayapida; iruṅkai that had bigger trunk; īrkkiṉṟavaṉai and a mahout; kŏṇṭu took them and; oṭum ran towards Kamsa's palace; nĕruṅku He is adorned with densly lined; paval̤amum string of corals; nernāṇum strings of; muttum pearls; maruṅkum iruntavā with exquisite beauty; vantu kāṇīre! come and see!