PAT 1.2.6

அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்

28 மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை *
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில் *
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன் *
முத்தமிருந்தவாகாணீரே முகிழ்நகையீர்! வந்துகாணீரே.
28 mattak kal̤iṟṟu * vacutevar tammuṭai *
cittam piriyāta * tevakitaṉ vayiṟṟil **
attattiṉ pattām nāl̤ * toṉṟiya accutaṉ *
muttam iruntavā kāṇīre * mukizhnakaiyīr vantu kāṇīre (6)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.2.6

Simple Translation

28. Our dear Achuthan (Kannan) was born ten days after the star Astham from the womb of Devaki the beloved wife of Vasudevan, the lord of many elephants that drip ichor. See how handsome he looks! O girls, you smile like blooming flowers, come see his looks.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மத்தக் களிற்று மதங்களுடைய யானைகளை நிர்வஹகிக்கும்; வசுதேவர் தம்முடை வசுதேவருடைய; சித்தம் பிரியாத மனத்தை விட்டுப்பிரியாத; தேவகி தன் வயிற்றில் தேவகியின் வயிற்றில்; அத்தத்தின் பத்தாம் நாள் ஹஸ்த நட்சத்திரத்தின் பத்தாம் நாள்; தோன்றிய அச்சுதன் அவதரித்த கண்ணபிரானின்; முத்தம் இருந்தவா காணீரே ஆணழகை காணீரே; முகிழ் நகையீர்! புன்சிரிப்பையுடைய பெண்களே; வந்து காணீரே! வந்து பாரீர்!
mukiḻ nakaiyīr! ladies with radiant smiles; muttam iruntavā kāṇīre see the beautiful form of; toṉṟiya accutaṉ Kannan, who incarnated on; attattiṉ pattām nāl̤ the tenth day of the Hasta star; tevaki taṉ vayiṟṟil in Devaki's womb; cittam piriyāta who stays close to; vacutevar tammuṭai Vasudeva; mattak kal̤iṟṟu who manages elephants that drip ichor; vantu kāṇīre! Come and behold!