PAT 1.2.3

வெள்ளித் தளை இலங்கும் கணைக்கால்

25 பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை *
அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை *
இணைக்காலில் வெள்ளித்தளை நின்றிலங்கும் *
கணைக்கால் இருந்தவாகாணீரே காரிகையீர்! வந்துகாணீரே.
25 paṇaittol̤ il̤a āycci * pāl pāynta kŏṅkai *
aṇaittu āra uṇṭu * kiṭanta ip pil̤l̤ai **
iṇaikkālil * vĕl̤l̤it tal̤ai niṉṟu ilaṅkum *
kaṇaikkāl iruntavā kāṇīre * kārikaiyīr vantu kāṇīre (3)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.2.3

Simple Translation

25. This infant (Kannan) in the embrace of the broad shouldered (shoulders like bamboo), young mother Yashodā, is suckling from her milking breasts and rests peacefully. See the beauty of his legs that are decorated with shining silver anklets. Oh! beautiful girls, come and see his ankles.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பணை தோள் மூங்கில் போன்ற தோள்களுடைய; இள ஆய்ச்சி இளமை பருவ யசோதையின்; பால் பாய்ந்த கொங்கை பால் சொரிகிற மார்பை; அணைத்து கைகளால் அணைத்துக்கொண்டு; ஆர உண்டு கிடந்த வயிறு நிரம்ப அமுது செய்த; இப் பிள்ளை இந்த கண்ணபிரானுடைய; இணை காலில் ஜோடியாக உள்ள பாதத்தின்; வெள்ளித் தளை நின்று வெள்ளித்தண்டை; இலங்கும் பிரகாசிக்கிற; கணைக்கால் கணைக்காலின் அழகை; இருந்தவா காணீரே இருந்தபடியே வந்து காணீரே!; காரிகையீர்! அழகிய பெண்களே!; வந்து காண்பீரே! வந்து பாரீர்!
kārikaiyīr! o beautiful women!; iruntavā kāṇīre see!; kaṇaikkāl the ankle's beauty; ilaṅkum that are shining; vĕl̤l̤it tal̤ai niṉṟu with silver anklets; iṇai kālil on the paired feet; ip pil̤l̤ai of Lord Krishna; āra uṇṭu kiṭanta who feeling hungry; aṇaittu embraced; pāl pāynta kŏṅkai and drank milk from the breast of; il̤a āycci youthful mother Yashodha; paṇai tol̤ who had bamboo-like shoulders; vantu kāṇpīre! Come and see!