PAT 1.2.20

கண்ணன் திருக்குழல்கள்

42 அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக்கொண்டு *
கழல்கள்சதங்கை கலந்துஎங்குமார்ப்ப *
மழகன்றினங்கள் மறித்துத்திரிவான் *
குழல்கள்இருந்தவாகாணீரே குவிமுலையீர்! வந்துகாணீரே.
42 azhakiya paimpŏṉṉiṉ * kol aṅkaik kŏṇṭu *
kazhalkal̤ cataṅkai * kalantu ĕṅkum ārppa **
mazha kaṉṟiṉaṅkal̤ * maṟittut tirivāṉ *
kuzhalkal̤ iruntavā kāṇīre * kuvimulaiyīr vantu kāṇīre (20)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

42. Carrying a beautiful golden stick in His hands He runs behind baby calves as the lovely sound of his anklets spreads everywhere. O girls with round breasts, come and see His curly hair.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அழகிய பைம்பொன்னின் அழகிய பசும்பொன்; கோல் கோலை; அங்கைக் கொண்டு அழகிய கையாலே பிடித்துக்கொண்டு; கழல்கள் பாதக்கழல்களும்; சதங்கை கலந்து சதங்கைகளும் சேர்ந்து; எங்கும் ஆர்ப்ப எல்லா இடங்களிலும் சப்திக்க; மழ கன்றினங்கள் இளம் கன்றுகளின் கூட்டங்களை; மறித்துத் திரிவான் மடக்கி திரியும் கண்ணபிரானுடைய; குழல்கள் இருந்தவா காணீரே தலைமுடி அழகைக் காணீரே!; குவிமுலையீர்! அழகிய பெண்களே!; வந்து காணீரே! வந்து காணீரே!
maṟittut tirivāṉ Kannan running behind; maḻa kaṉṟiṉaṅkal̤ groups of baby calfs; aṅkaik kŏṇṭu holding in His beautiful hand; aḻakiya paimpŏṉṉiṉ a beautiful golden; kol stick; cataṅkai kalantu His anklets; kaḻalkal̤ and His foot; ĕṅkum ārppa made sound everywhere; kuvimulaiyīr! oh, beautiful women!; kuḻalkal̤ iruntavā kāṇīre see the beauty of His hair!; vantu kāṇīre! come and see!