PAT 1.2.19

பரமன் திருநுதல் (நெற்றி)

41 முற்றிலும்தூதையும் முன்கைம்மேல்பூவையும் *
சிற்றிலிழைத்துத் திரிதருவோர்களை *
பற்றிப்பறித்துக்கொண்டு ஓடும்பரமன்தன் *
நெற்றிஇருந்தவாகாணீரே நேரிழையீர்! வந்துகாணீரே.
41 muṟṟilum tūtaiyum * muṉkaimel pūvaiyum *
ciṟṟil izhaittut * tiri taruvorkal̤aip **
paṟṟip paṟittukkŏṇṭu * oṭum paramaṉtaṉ *
nĕṟṟi iruntavā kāṇīre * nerizhaiyīr vantu kāṇīre (19)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

41. He grabs the birds from the hands of small girls who carry a winnowing fan and a small pot and wander holding a puvai bird on their wrists making small sand houses. Come and see His beautiful forehead, O girls decorated with precious jewels, come and see His forehead.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிற்றில் இழைத்து மணலில் சிறு வீடு கட்டி; திரிதருவோர்களை விளையாடித்திரியும் பெண்களை; முற்றிலும் தூதையும் சிறு முறங்களையும் பானைகளையும்; முன் கைம்மேல் கைமேல் வைத்து விளையாடும்; பூவையும் பூவையும் (மைனா); பற்றி கையைப்பிடித்து; பறித்துக் கொண்டு பறித்துக் கொண்டு; ஓடும் பரமன்தன் ஓடும் கண்ணபிரானின்; நெற்றி இருந்தவா நெற்றியின் அழகை; காணீரே காண்பீரே!; நேரிழையீர்! நேர்த்தியான ஆபரணங்களையுடையவர்களே!; வந்து காணீரே! வந்து காண்பீரே!
tiritaruvorkal̤ai oh women playing and wandering; ciṟṟil iḻaittu built small sand houses; muṉ kaimmel and playing; muṟṟilum tūtaiyum with sieves and pots; neriḻaiyīr! those with elegant ornaments!; kāṇīre see!; nĕṟṟi iruntavā the beauty of Kannan's forehead; oṭum paramaṉtaṉ who was running; paṟittuk kŏṇṭu after grabbing; paṟṟi the hands of women holding; pūvaiyum Myna birds; vantu kāṇīre! come and see!