PAT 1.2.14

ஆய்ச்சியர் விரும்பும் அழகிய வாய்

36 எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக் கொண்டு *
அந்தொண்டைவாயமுதாதரித்து * ஆய்ச்சியர்
தம்தொண்டைவாயால் தருக்கிப்பருகும் * இச்
செந்தொண்டைவாய்வந்துகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே.
36 ĕm tŏṇṭai vāyc ciṅkam * vā ĕṉṟu ĕṭuttukkŏṇṭu *
an tŏṇṭai vāy * amutu ātarittu ** āycciyar
tam tŏṇṭai vāyāl * tarukkip parukum * ic
cĕn tŏṇṭai vāy vantu kāṇīre * ceyizhaiyīr vantu kāṇīre (14)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.2.14

Simple Translation

36. “You are a lion and you have a sweet, red mouth, come. ” say the cowherd women. They kiss His red mouth, drink its nectar, and embrace Him. O girls adorned with lovely red colored ornaments, come and see His red mouth. Come and see.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆய்ச்சியர் கோபிகைகள்; தொண்டை வாய் சிவந்த அதரத்தையுடைய; எம் சிங்கம் வா என்று எம் சிங்கக்குட்டியே வா என்று; எடுத்துக்கொண்டு இடுப்பில் எடுத்துக்கொண்டு; அத் தொண்டை வாய் கண்ணனுடைய சிவந்த அதரத்தில்; அமுது ஆதரித்து ஊறுகிற அமிர்தத்தை விரும்பி; தம் தொண்டை வாயால் தங்களுடைய கொவ்வை வாயை; தருக்கிப் பருகும் அவன் வாயோடு சேர்த்து பருகுகிற; இச்செந் தொண்டை இந்த கண்ணனின் சிவந்த; வாய் வாயழகை; வந்துகாணீரே! வந்துகாணீரே!; சேயிழையீர்! சிவந்த ஆபரணம் அணிந்துள்ள பெண்களே!; வந்து காணீரே! வந்து பாரீர்!
ĕm ciṅkam vā ĕṉṟu come my lion cub, called; āycciyar the gopis; ĕṭuttukkŏṇṭu who carried Kannan on their waist; tŏṇṭai vāy who had red lips; amutu ātarittu desiring the emanating nectar; at tŏṇṭai vāy on His red lips; tam tŏṇṭai vāyāl they placed their own beautiful lips; tarukkip parukum to drink the nectar; ceyiḻaiyīr! o women adorned with red ornaments!; vantukāṇīre! come and see!; iccĕn tŏṇṭai this Kannan's red; vāy beautiful mouth; vantu kāṇīre! come and see!