NMT 78

நாரணன் நாமமே கேட்டிரு

2459 கண்டுவணங்கினார்க்கு என்னாங்கொல்? * காமனுடல்
கொண்டதவத்தாற்கு உமையுணர்த்த * - வண்டலம்பும்
தாரலங்கல்நீள்முடியான்தன் பெயரேகேட்டிருந்து * அங்
காரலங்கலானமையாலாய்ந்து.
2459 kaṇṭu vaṇaṅkiṉārkku * ĕṉṉāmkŏl ? * kāmaṉ uṭal
kŏṇṭa * tavattāṟku umai uṇartta ** - vaṇṭu alampum
tār alaṅkal nīl̤ muṭiyāṉ * taṉ pĕyare keṭṭiruntu * aṅku
ār alaṅkal āṉamaiyāl āyntu -78

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2459. When Shivā who burned Madan’s body was doing tapas and Uma told him the name of Thirumāl, the god adorned with garlands, even Shivā’s tapas was disturbed. What will happen to people if they really see Māl and worship him?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காமன் உடல் மன்மதனுடைய சரீரத்தை; கொண்ட சாம்பலாக்கிய; தவத்தாற்கு தபஸ்வியான ருத்ரனுக்கு; உமை பார்வதியானவள்; வண்டு அலம்பும் வண்டுகள் ஒலிக்க; தார் அலங்கல் பெற்ற பூமாலயையுடைய; நீள் முடியான் எம்பெருமானின்; தன் பெயரே திருநாமங்களை; உணர்த்த உரைக்க அதை; கேட்டிருந்து கேட்ட மாத்திரத்திலேயே; அங்கு அப்போதே; ஆர் அலங்கல் மிகவும் அசைந்து; ஆனமையால் போனமையை; ஆய்ந்தால் ஆராய்ந்து பார்த்தால்; கண்டு நேரே கண்டு; வணங்கினார்க்கு வணங்குமவர்கள்; என்னாம் எப்படித்தான்; கொல் உருகுவார்களோ?
kāman manmadhan’s; udal body; koṇda one who turned it into ashes; thavaththāṛku ṣiva who carries out the penance; umai (his wife) pārvathi; uṇarththa as she indicated; vaṇdu alambum thār alangal nīṇ mudiyān than peyarĕ kĕttirundhu on hearing the divine names of emperumān who dons garland on his long crown, and on which beetles keep swarming; angu at that moment itself; ār alangal ānamai becoming transformed; āyndhāl if one were to analyse; kaṇdu vanaginārkku those who see and worship; en ām kol what sort of transformation will take place? (cannot be said easily)