NMT 65

மாதவனையே எண்ணுக: வைகுந்தம் கிடைக்கும்

2446 சூதாவது என்நெஞ்சத்தெண்ணினேன் * சொல்மாலை
மாதாய மாலவனைமாதவனை * - யாதானும்
வல்லவா சிந்தித்திருப்பேற்கு * வைகுந்தத்து
இல்லையோசொல்லீரிடம்?
2446 cūtu āvatu ĕṉ nĕñcattu ĕṇṇiṉeṉ * cŏl mālai
mātu āya * māyavaṉai mātavaṉai ** - yātāṉum
vallavā * cintittiruppeṟku * vaikuntattu
illaiyo cŏllīr iṭam? -65

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2446. I praise Thirumāl, Madhavan, the mother of all with my poetry and in my heart. Is there not a place in Vaikundam for me who think always of him only? Tell me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாது ஆய அழகே வடிவானவனும்; மாலவனை அடியார்களிடத்தில் அன்பு பூண்டவனுமான; மாதவனை மாதவனைக் குறித்த; சொல் மாலை பிரபந்தங்களை; யாதானும் எதையாகிலும் எப்படியாகிலும்; வல்லவா இடைவிடாது; சிந்தித்திருப்பேற்கு அநுஸந்திக்கும் எனக்கு; வைகுந்தத்து இடம் வைகுந்தத்தில் இடம்; இல்லையோ இல்லையா; சொல்லீர் சொல்லுங்கள்; சூது ஆவது இதுவே நல்ல உபாயம் என்று; என் நெஞ்சத்து என் மனதில்; எண்ணினேன் உறுதி கொண்டேன்
mādhu āya one who is the epitome of beauty; mālavanai one who is infatuated with followers; mādhavanai about thirumāl (ṣriman nārāyaṇa); solmālai these garlands of words; yādhānum valla ā sindhiththu iruppĕṛku me who has the capability to meditate until ī have the strength; vaigundhaththu idam illaiyŏ is there no place in ṣrīvaikuṇtam?; solleer please say; sūdhu āvadhu this is the most apt for us; en nenjaththu eṇṇinĕn ī affirmed in my heart