NMT 59

கேசவா! நான் உன் அடிமை: ஆண்டுகொள்

2440 அன்பாவாய் ஆரமுதமாவாய் * அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும்நீயாவாய் * - பொன்பாவை
கேள்வா! கிளரொளியென்கேசவனே! * கேடின்றி
ஆள்வாய்க்குஅடியேன்நானாள்.
2440 aṉpu āvāy * ār amutam āvāy * aṭiyeṉukku
iṉpu āvāy * ĕllāmum nī āvāy ** - pŏṉ pāvai
kel̤vā! * kil̤ar ŏl̤i ĕṉ kecavaṉe * keṭu iṉṟi
āl̤vāykku aṭiyeṉ nāṉ āl̤ -59

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2440. I am your devotee and you are my love and sweet nectar joy for me and everything else. You, the beloved of the goddess Lakshmi as beautiful as a golden statue are my Kesavan, my shining light. You protect me so that troubles do not come to me. I am your devotee and your servant.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்பு ஆவாய் என்னிடம் அன்புடையவனும்; ஆர் அமுதம் நிறைந்த அமுதம்; ஆவாய் போன்றவனும்; அடியேனுக்கு எனக்கு; இன்பு உன் அநுபவமான; ஆவாய் சுகத்தை அருளினவனே; என் கேசவனே! என் கேசவனே!; கேடு இன்றி ஒரு குறையுமில்லாமல்; ஆள்வாய்க்கு ரக்ஷிக்கவல்லவனே; எல்லாமும் எல்லா சுகங்களும்; நீ ஆவாய் நீயேயாக இருப்பவனே; பொன் பாவை கேள்வா! திருமகள் நாதனே!; கிளர் கிளர்ந்தெழும்; ஒளி காந்தியையுடைய உனக்கு; அடியேன் நான் நான் அடிமைப்பட்டவனாக; ஆள் இருக்கிறேன்
anbu āvāy one who is the epitome of affection (towards me)!; ār amudham āvāy ŏne who is like complete nectar!; adiyĕnukku inbu āvāy one who created for me (the experiencing of your) enjoyment!; ellāmum nī āvāy one who is all other enjoyment for me!; pon pāvai kĕl̤vā ŏh the consort of mahālakshmi!; kil̤ar ol̤i (due to the union with mahālakshmi) having radiant splendour; en kĕsavanĕ ŏh emperumān (my l̤ord)!; kĕdu inṛi without any fault; āl̤vāykku for you who would take in a servitor; adiyĕn nān ī, the servitor,; āl̤ am a servitor