NMT 56

திருமாலுக்கு இணையே இல்லை

2437 அவரிவரென்றில்லை அனங்கவேள்தாதைக்கு *
எவருமெதிரில்லைகண்டீர் * - உவரிக்
கடல்நஞ்சமுண்டான் கடனென்று * வாணற்கு
உடன்நின்றுதோற்றானொருங்கு.
2437 avar ivar ĕṉṟu illai * aṉaṅka vel̤ tātaikku *
ĕvarum ĕtir illai kaṇṭīr ** - uvarik
kaṭal nañcam uṇṭāṉ kaṭaṉ ĕṉṟu * vāṇaṟku
uṭaṉ niṉṟu toṟṟāṉ ŏruṅku -56

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2437. Someone may say this one is god or that one is god, but there is no one equal to the father of Kama, the beautiful prince. Nedumāl fought and conquered Shivā who drank the poison from the salty ocean and his escort when they came to help Vānanāsuran and they all lost the battle with Thirumāl.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அவர் இவர் பெரியவர் சிறியவர்; என்று இல்லை என்ற பேதமில்லாமல்; அனங்கவேள் மன்மதனுக்கு; தாதைக்கு தந்தையான கண்ணனுக்கு; எவரும் ஒருவரும்; எதிர் இல்லை கண்டீர் சமமானவரில்லை; உவரிக் கடல் உப்புக் கடலில்; நஞ்சும் தோன்றின விஷத்தை; உண்டான் உண்ட ருத்ரனும்; கடன் உன்னை காக்க நான்; என்று கடமைப் பட்டவன் என்று; வாணற்கு பாணாஸுரனை காக்க; உடன் நின்று அவனோடு கூடவேயிருந்து; ஒருங்கு பாணாஸுரனை; தோற்றான் போலவே தோற்றான்
avar ivar enṛu illai there is no distinction between knowledgeable and ignorant people; anangavĕl̤ thādhaikku kaṇṇapirān (krishṇa), the father of manmatha (cupid); evarum no one; edhir illai kaṇdīr see, no capability to oppose him; uvarikkadal nanjam uṇdān ṣiva, who swallowed the poison which emanated from salty ocean; vāṇaṛku to bāṇāsura; kadan enṛu saying “it is my duty to protect you”; udan ninṛu standing together with him in the battle (against emperumān); orungu thŏṝān lost and fled