NMT 54

எல்லாத் தெய்வங்களுமாக இருப்பவன் திருமாலே

2435 தேவராய்நிற்கும் அத்தேவும் * அத்தேவரில்
மூவராய்நிற்கும் முதுபுணர்ப்பும் * - யாவராய்
நிற்கின்றதெல்லாம் நெடுமாலென்றோராதார் *
கற்கின்றதெல்லாம்கடை.
2435 tevarāy * niṟkum at tevum * at tevaril
mūvarāy niṟkum * mutu puṇarppum ** - yāvarāy
niṟkiṉṟatu ĕllām * nĕṭumāl ĕṉṟu orātār *
kaṟkiṉṟatu ĕllām kaṭai -54

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2435. All that a person has learned is a waste if he does not worship Nedumāl the only god, the most ancient of the all the three gods.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேவராய் அக்நி இந்திரன் முதலிய தேவதைகளாய்; நிற்கும் நிற்கும்; அத் தேவும் அந்த தெய்வமும்; அத் தேவரில் அந்த தேவர்களுக்குள்; மூவராய் மும்மூர்த்திகளாயும்; நிற்கும் நிற்கும்; முது அவற்றில் பிரதம அவதாரமான; புணர்ப்பும் விஷ்ணுவாகவும்; யாவராய் அறிவுடைய ஆத்மாக்களாகவும்; நிற்கின்றது அனைத்துமாகவும் நிற்கும்; எல்லாம் எல்லாம்; நெடு மால் என்று திருமால் என்று; ஓராதார் ஆராய்ந்து உணர மாட்டாதவர்கள்; கற்கின்றது கற்கும் கல்வி; எல்லாம் கடை மிகத் தாழ்ந்ததே
dhĕvarāy niṛkum aththĕvum among (ādhithya, indhra et al) dhĕvathās (celestial entities) standing as vishṇu and as upĕndhra; aththĕvaril among those dhĕvas; mūvar āy niṛkum standing as one among the three mūrthi (forms); mudhu puṇarppum the first incarnation; yāvar āy niṛkinṛadhu ellām standing as all chith (sentient) and achith (insentient) entities such as dhĕvas et al; nedumāl enṛu ŏrādhār those who do not analyse and know that he is nārāyaṇa alone; kaṛkinṛadhu ellām kadai all the education that they have had is very lowly.