NMT 5

நான்மறையானவன் நரசிம்மனே

2386 தொகுத்தவரத்தனாய்த் தோலாதான்மார்வம் *
வகிர்த்தவளையுகிர்த்தோள்மாலே! * - உகத்தில்
ஒருநான்றுநீயுயர்த்தி உள் வாங்கிநீயே *
அருநான்குமானாயறி.
2386 tŏkutta varattaṉāyt * tolātāṉ mārvam *
vakirtta val̤ai ukirt tol̤ māle ** - ukattil
ŏru nāṉṟu nī uyartti * ul̤ vāṅki nīye *
aru nāṉkum āṉāy aṟi -5

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2386. O dear mighty-armed Thirumāl, you split open the chest of Hiranyan who had received many boons. Never defeated by any of your enemies, you created the four Vedās in the world and hold inside yourself all the important gods, human, animals and plants.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொகுத்த தவஞ்செய்து சேர்த்த; வரத்தனாய் வரங்களை உடையவனாய்; தோலாதான் தோல்வியடையாத இரணியனின்; மார்வம் வகிர்த்த மார்பைப் பிளந்த; வளை உகிர் வளைந்த நகங்களோடு கூடின; தோள் மாலே! கைகளையுடைய பெருமானே!; உகத்தில் நீ நீ பிரளய காலத்தில் உலகங்களை; உள்வாங்கி உன் வயிற்றில் வைத்து; ஒருநான்று மீண்டும் ஸ்ருஷ்டி சமயத்தில்; உயர்த்தி நீயே வெளிப்படுத்திய நீயே; நான்கும் தேவர்கள் மனிதர்கள் விலங்குகள் தாவரங்கள் ஆகிய நான்கிற்கும் காரணமும்; அரு ஆனாய் கார்யமுமானாய் என்பதை; அறி அறிவாய்
thoguththa varaththanāy earning the boons (through penance); thŏlādhān hiraṇya kashyap who did not lose to anyone; mārvam chest; vagirththa splitting into two; val̤ai ugir curled up nails; thŏl̤ and having shoulders; mālĕ ŏh benefactor!; you; ugaththil during deluge; ul̤ vāngi keeping (the worlds) inside, after annihilating; oru nānṛu during the time (of creation); uyarththi bringing (those worlds) outside; nīyĕ you, with such qualities; aru nāngum ānāy became the indwelling soul for the four types of entities (celestial, human, animal and botanical); aṛi know this