NMT 44

எல்லோரும் வேங்கட மலைக்கே செல்லுங்கள்

2425 கொண்டுகுடங்கால்மேல் வைத்தகுழவியாய் *
தண்டவரக்கன்தலைதாளால் - பண்டெண்ணி *
போம்குமரன் நிற்கும் பொழில்வேங்கடமலைக்கே *
போம்குமரருள்ளீர்! புரிந்து.
2425 kŏṇṭu kuṭaṅkāl * mel vaitta kuzhaviyāy *
taṇṭa arakkaṉ talai tāl̤āl - paṇṭu ĕṇṇi *
pom kumaraṉ niṟkum * pŏzhil veṅkaṭa malaikke *
pom kumararul̤l̤īr! purintu -44

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2425. In ancient times when he was young, with his toes he counted the ten heads of Rāvana who had a mighty army. O young ones, go to the Thiruvenkatam hills surrounded with groves where Kannan stays, remaining always young.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குமரருள்ளீர்! இளமையாயிருப்பவர்கள்!; பண்டு முன்பு; குடங்கால் மேல் மடியின் மேல்; கொண்டு பரிவுடன்; வைத்த அமர்ந்து கொண்ட; குழவியாய் சிறு குழந்தையாய்; குமரன் எம்பெருமான்; நிற்கும் நிற்குமிடமான; தண்ட தண்டிக்கத் தகுந்த; அரக்கன் இராவணனுடைய; தலை பத்துத் தலைகளையும்; தாளால் தன் திருவடியாலே; எண்ணி கீறி எண்ணிக் காட்டிய பின்; போம் மறைந்துவிட்ட; பொழில் சோலைகள் சூழ்ந்த; வேங்கடமலைக்கே திருமலைக்கே; புரிந்து போம் விரும்பிச் செல்லுங்கள்
kumarar ul̤l̤īr ŏh those without senility!; paṇdu once upon a time; kudangāl mĕl on the lap; koṇdu vaiththa kuzhaviyāy with the infant kept; dhaṇdam arakkan rāvaṇa, apt to be punished; thalai ten heads; thāl̤āl with divine foot; kīṛi showing by scratching and counting; pŏm one who disappeared; kumaran emperumān who is always young; niṛkum the place where he stands; pozhil vĕngadam malaikkĕ to thiruvĕngadam which is surrounded by orchards; purindhu pŏm go with desire