NMT 39

திருவேங்கடவனையே அழைப்பேன்

2420 அழைப்பன் திருவேங்கடத்தானைக்காண *
இழைப்பன் திருக்கூடல்கூட * - மழைப்பே
ரருவி மணி வரன்றிவந்திழிய * யானை
வெருவியரவொடுங்கும்வெற்பு.
2420 azhaippaṉ * tiruveṅkaṭattāṉaik kāṇa *
izhaippaṉ * tirukkūṭal kūṭa ** - mazhaip per
aruvi * maṇi varaṉṟi vantu izhiya * yāṉai
vĕruvi aravu ŏṭuṅkum vĕṟpu -39

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2420. She says, “I call the god of Thiruvenkatam hills where the large waterfalls descends like rain, bringing bright jewels, and elephants are frightened when they hear the sound of the water and snakes are scared and hide when they see the brightness of the jewels. I wish to see him and make a divine ThirukKoodal to get his love. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருவேங்கடத்தானை திருவேங்கடமுடையானை; காண பார்க்க; அழைப்பன் வாய் விட்டுக் கூப்பிடுகிறேன்; மழை மழைபோல் சொரிகின்ற; பேர் அருவி பெரிய அருவிகளானவை; மணி ரத்னங்களை; வரன்றி வந்து திரட்டிக்கொண்டு வரும்; இழிய அந்த ரத்தினங்களை; யானை பார்த்து யானை; வெருவி அக்னி என்று பயந்து நிற்கவும்; அரவு பாம்புகளானவை அந்த ரத்னங்களை; ஒடுங்கும் மின்னலென்று எண்ணி புற்றிலே சென்று மறையும்; வெற்பு திருமலையை; கூட திருக்கூடல் சென்று கூடவேண்டும் என்று; இழைப்பன் விரும்புகிறேன்
thiruvĕngadaththānai thiruvĕngadamudaiyān (emperumān) who resides in thiruvĕngadam; kāṇa to worship him with my eyes; azhaippan ī call out; mazhai during rainy season; pĕr aruvi the huge streams; maṇi gemstones (which are scattered at various places); varanṛi vandhu izhiya gathering them and falling; yānai elephant; veruvi standing in fear; aravu python; odungum (mistaking those gemstones for lightning) will hide inside anthills; veṛpu the divine hills of thirumalai; kūda to join such hills; thirukkūdal kūda izhaippan ī will call out in a special way