NMT 29

ஒளியுருவனே திருமால்

2410 உகப்புருவன்தானே ஒளியுருவன்தானே *
மகப்புருவன்தானேமதிக்கில் * - மிகப்புருவம்
ஒன்றுக்கொன்று ஓசனையான்வீழ * ஒருகணையால்
அன்றிக்கொண்டெய்தானவன்.
2410 ukappu uruvaṉ tāṉe * ŏl̤i uruvaṉ tāṉe *
makappu uruvaṉ tāṉe matikkil ** - mikap puruvam
ŏṉṟukku ŏṉṟu * ocaṉaiyāṉ vīzha * ŏru kaṇaiyāl
aṉṟikkŏṇṭu ĕytāṉ avaṉ-29

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2410. Our lord shot his one arrow and killed Kumbakarnan with long eyebrows. He will be happy if you praise him whose form is brightness and joy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மிகப் புருவம் பெரிய புருவங்கள்; ஒன்றுக்கு ஒரு புருவத்துக்கு ஒரு புருவம்; ஒன்று ஒரு காத தூரம் நீளமிருக்கப் பெற்ற; ஓசனையான் வீழ கும்பகர்ணன் விழும்படியாக; அன்றிக்கொண்டு சீறிக்கொண்டு; ஒரு கணையால் ஒரு பாணத்தினால்; எய்தான் அவன் எய்த இராமபிரானை; மதிக்கில் சிந்தித்துப் பார்த்தால்; தானே அவனே; உகப்பு அனைவராலும் விரும்பத்தக்க; உருவன் உருவமுடையவனும்; ஒளி ஒளிமயமான; உருவன் உருவமுடையவனும்; தானே அவனே; மகப்பு ஆச்சர்யமான; உருவன் உருவமுடையவனும்; தானே அவனேயாக இருப்பன்
madhikkil if one were to think; ugappu uruvam thānĕ he himself has the divine form which is desired by everyone; ol̤i uruvam thānĕ he himself has the divine form which is radiant; magappu uruvam thānĕ he himself has the form which is amaśing; avan that ṣrī rāma; miga huge; puruvam onṛukkonṛu ŏsanaiyān kumbhakarṇa who is so huge that his eye brows are separated by a huge distance; vīzha to be destroyed; anṛikkoṇdu coming furiously (at kumbhakarṇa); oru kaṇaiyāl with one arrow; eydhān shot and killed him