NMT 24

திருமாலையே புகழ்க

2405 நிகழ்ந்தாய் பால்பொன்பசுப்புக்கார்வண்ணம்நான்கும் *
இகழ்ந்தாயிருவரையும்வீய * - புகழ்ந்தாய்
சினப்போர்ச்சுவேதனைச் சேனாபதியாய் *
மனப்போர்முடிக்கும்வகை.
2405 nikazhntāy * pāl pŏṉ pacuppuk * kār vaṇṇam nāṉkum
ikazhntāy * iruvaraiyum vīya ** - pukazhntāy
ciṉap porc cuvetaṉaic * ceṉāpatiyāy *
maṉap por muṭikkum vakai -24

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2405. You have the colors of milk, gold, green and a dark cloud and you fought with the two wrestlers and destroyed them. You drove the chariot for Arjunā, advised him to fight the Bhārathā war bravely and helped the Pāndavās win the war.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பால் பொன் வெண்மை சிவப்பு; பசுப்புக் கார் பச்சை கறுப்பு ஆகிய; வண்ணம் நான்கு வண்ணங்களோடு; நிகழ்ந்தாய் நான்கு யுகங்களில் தோன்றினாய்; இருவரையும் மதுகைடபர்களாகிற அசுரர்கள்; வீய மாளும்படி; இகழ்ந்தாய் அழித்தாய்; சேனாபதியாய் அர்ஜுனனுக்கு சேனாதிபதியாய்; மனப் போர் ஸங்கல்பித்த யுத்தத்தை; முடிக்கும் வகை முடிக்கும்படி; சினப் போர் சீறிக்கொண்டு யுத்தம் செய்த; சுவேதனை அர்ஜுனனை; புகழ்ந்தாய் புகழ்ந்தாய்
pāl pon pasuppu kār nāngu vaṇṇamum having the four colours of white, red, green and black; nigazhndhāy glittered (in the four yugas) [yuga is a period of time]; iruvaraiyum the two demons madhu and kaitabha; vīya to be destroyed; igazhndhāy you removed; sĕnāpathiyāy being the protector of arjuna’s army; manam having the desire (to enable dhraupadhi to plait her hair); pŏr the mahābhāratha war; mudikkum vagai the way by which it will be ended; sinappŏr suvĕdhanai arjuna, who has white horse as his vehicle and who fought furiously in the war; pugazhndhāy you praised