NAT 9.6

நான் சமர்ப்பிப்பதை அழகர் ஏற்பாரோ?

592 நாறுநறும்பொழில் மாலிருஞ்சோலைநம்பிக்கு * நான்
நூறுதடாவில்வெண்ணெய் வாய்நேர்ந்துபராவிவைத்தேன் *
நூறுதடாநிறைந்த அக்காரவடிசில்சொன்னேன் *
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவைகொள்ளுங்கொலோ. (2)
592 ## nāṟu naṟum pŏzhil * māliruñcolai nampikku * nāṉ
nūṟu taṭāvil vĕṇṇĕy * vāynerntu parāvi vaitteṉ **
nūṟu taṭā niṟainta * akkāra aṭicil cŏṉṉeṉ *
eṟu tiruvuṭaiyāṉ * iṉṟu vantu ivai kŏl̤l̤uṅ kŏlo? (6)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

592. I made a hundred pots of butter for Nambi of Thirumālirunjolai surrounded with fragrant groves. I told him I will fill all the hundred pots with sweet Pongal for him. He who enshrines Lakshmi on His chest, grows more and more beautiful. Do you think He will come and eat?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
நறு பொழில் பரிமளம் மிக்க பொழில்; நாறும் மணக்கும்; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையின்; நம்பிக்கு எம்பிரானுக்கு; நான் நூறு தடாவில் நான் நூறு அண்டாக்களில்; வெண்ணெய் வெண்ணெயை; வாய் நேர்ந்து வாயாலே கூறி; பராவி வைத்தேன் சமர்ப்பித்தேன்; நூறு தடா நிறைந்த நூறு அண்டாக்கள் நிறைந்த; அக்கார அடிசில் அக்கார அடிசில்; சொன்னேன் சமர்ப்பித்தேன்; ஏறு மார்பில் அமர்ந்த; திருவுடையான் திருமகளின் நாதன்; இன்று வந்து இவை இன்று இங்கு வந்து; கொள்ளுங் இவற்றைத் திருவுள்ளம்; கொலோ? பற்றுவாரோ?
nampikku for the Lord of; māliruñcolai Thirumaliruncholai; nāṟum that has fragrant; naṟu pŏḻil groves; nāṉ nūṟu taṭāvil I kept hundred pots; vĕṇṇĕy of butter; vāy nerntu and by word of mouth; parāvi vaitteṉ I offered them; cŏṉṉeṉ I also offered Him; nūṟu taṭā niṟainta hundred pots of; akkāra aṭicil sweet pongal; tiruvuṭaiyāṉ the Lord with Lakshmi; eṟu on His chest; iṉṟu vantu ivai will He come here today; kŏlo? and accept; kŏl̤l̤uṅ my offerings

Detailed WBW explanation

Emperumān, endowed with perfection in His divine attributes, eternally resides in Thirumālirunjolai, a sacred abode graced by fragrant streams. Through my humble words, I have offered a hundred pots of butter to that supreme Emperumān. Additionally, I have presented a hundred pots of sweet sugar rice, conveyed through these very words. Will Azhagar Emperumān, whose opulence magnifies with each passing day, graciously accept these dual offerings today?