NAT 12.5

காளியனுச்சியில் நடமாடிய பொய்கைக்கு என்னை உய்த்திடுமின்

621 ஆர்க்குமென்நோயிதறியலாகாது
அம்மனை மீர்! துழதிப்படாதே *
கார்க்கடல் வண்ணனென்பானொருவன்
கைகண்டயோகம்தடவத்தீரும் *
நீர்க்கரைநின்றகடம்பையேறிக்
காளியனுச்சியில்நட்டம்பாய்ந்து *
போர்க்களமாகநிருத்தஞ்செய்த
பொய்கைக்கரைக்கென்னையுய்த்திடுமின்.
621 ārkkum ĕṉ noy itu aṟiyalākātu *
ammaṉaimīr tuḻatip paṭāte *
kārkkaṭal vaṇṇaṉ ĕṉpāṉ ŏruvaṉ *
kaikaṇṭa yokam taṭavat tīrum **
nīrk karai niṉṟa kaṭampai eṟik *
kāl̤iyaṉ ucciyil naṭṭam pāyntu *
porkkal̤amāka niruttam cĕyta *
pŏykaik karaikku ĕṉṉai uyttiṭumiṉ. (5)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 9-31

Simple Translation

621. O mothers, no one can understand the disease I suffer from. it will be cured only if the dark, ocean-colored god embraces me with His arms. Take me to the pond where He climbed upon the Kadamba tree, jumped into the pond and danced on Kālingā's hood, as if he were dancing on a battlefield. Please leave me on the banks of the pond.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அம்மனைமீர்! தாய்மார்களே!; என் இது என்னுடைய இந்த; நோய் வியாதியானது; ஆர்க்கும் எவராலும்; அறியலாகாது அறிய முடியாது; துழதிப் படாதே நீங்கள் துக்கப்படாமல்; நீர்க் கரை நின்ற மடுவின் கரையிலிருந்த; கடம்பை ஏறி கடம்ப மரத்தின் மேல் ஏறி; காளியன் காளிய நாகத்தின்; உச்சியில் படத்தின் மேலே; நட்டம் நர்த்தன வகையாக; பாய்ந்து பாய்ந்து பொய்கையையே; போர்க்களமாக போர்க்களமாக்கி; நிருத்தம் செய்த நர்த்தனம் செய்த; பொய்கைக் கரைக்கு மடுவின் கரையிலே; என்னை என்னை; உய்த்திடுமின் சேர்த்துவிடுங்கள்; கார் கடல் நீலக் கடல்; வண்ணன் நிறத்தனான; என்பான் ஒருவன் கண்ணபிரான்; தடவத் தடவுவானாகில்; தீரும் நோய் தீர்ந்து போகும்; கை கண்ட கை மேலே பலிக்கும்; யோகம் உபாயமாகும்

Detailed WBW explanation

Oh revered mothers! My affliction is beyond the grasp of any soul. Bereft of sorrow, you leave me upon the sacred banks of Yamunā, where Kaṇṇan ascended a Kadamba tree, leaping with the poise of a divine dancer onto the head of the demonic serpent, Kāliya, transforming the serene banks into a veritable battlefield. Should Kaṇṇan, whose hue mirrors the deep ocean, deign to caress me with His celestial hands, my ailment shall find its cure. Indeed, this is the path to immediate solace.