NAT 12.3

நந்தகோபாலன் இருக்கைக்கு என்னை உய்த்திடுமின்

619 தந்தையும்தாயுமுற்றாரும்நிற்கத்
தனிவழிபோயினாள்என்னும்சொல்லு *
வந்தபின்னைப்பழிகாப்பரிது
மாயவன்வந்துருக்காட்டுகின்றான் *
கொந்தளமாக்கிப்பரக்கழித்துக்
குறும்புசெய்வானோர்மகனைப்பெற்ற *
நந்தகோபாலன்கடைத்தலைக்கே
நள்ளிருட்கணென்னையுய்த்திடுமின்.
619 tantaiyum tāyum uṟṟārum niṟkat *
taṉivaḻi poyiṉāl̤ ĕṉṉum cŏllu *
vanta piṉṉaip paḻi kāppu aritu *
māyavaṉ vantu uruk kāṭṭukiṉṟāṉ **
kŏntal̤am ākkip parakkaḻittuk *
kuṟumpu cĕyvāṉ or makaṉaip pĕṟṟa *
nantakopālaṉ kaṭaittalaikke *
nal̤-iruṭkaṇ ĕṉṉai uyttiṭumiṉ (3)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

619. People might blame saying, "Leaving her father, mother and relatives, she has gone her own way". It is difficult to avoid the disgrace that may fall upon you, when they come to know that I went with Kannan. Māyavan comes to me often and stands before me. Please take me to the doorsteps of Nandagopan, whose naughty child Kannan does lovable pranks. Leave me there at midnight.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தந்தையும் தாயும் தந்தையும் தாயும்; உற்றாரும் நிற்க உறவினரும் இருக்கும்போது; தனிவழி தன் வழியிலே தாந்தோன்றியாக; போயினாள் புறப்பட்டாள்; என்னும் என்கிற; சொல்லு வார்த்தையானது; வந்த பின்னை உலகில் பரவின பிறகு; பழி அப்பழியை; காப்பு அரிது தடுப்பது முடியாது; மாயவன் மாயப்பிரான்; வந்து வந்து; உருக் காட்டுகின்றான் தன் வடிவை; காட்டுகின்றான் காட்டுகின்றான்; கொந்தளம் ஆக்கி முரண்டு பிடித்து; பரக்கழித்து பழி விளைவித்து; குறும்பு செய்வான் குறும்பு செய்யும்; ஓர் மகனைப் பெற்ற ஓர் பிள்ளையைப் பெற்ற; நந்தகோபாலன் நந்தகோபருடைய; கடைத்தலைக்கே மாளிகையின் வாசலிலே; நள் இருட் கண் நடு இரவிலே; என்னை உய்த்திடுமின் என்னை விட்டு விடுங்கள்

Detailed WBW explanation

Upon the dissemination of the words throughout the world—"She has ventured forth alone, upon the streets, while father, mother, and kin are present"—the stigma becomes ineradicable. It is beyond my capacity to refrain from proceeding alone. This is so because, Kṛṣṇa, whose deeds are wondrous, is manifesting His divine form directly before me, drawing me irresistibly towards

+ Read more