MUT 7

மனமே! கருடவாகனனைத் தொழுவோம்

2288 கழல்தொழுதும்வாநெஞ்சே! கார்கடல்நீர்வேலை *
பொழிலளந்தபுள்ளூர்திச்செல்வன் * - எழிலளந்தங்
கெண்ணற்கரியானை எப்பொருட்கும்சேயானை *
நண்ணற்கரியானைநாம்.
2288 kazhal tŏzhutum vā nĕñce! * kārk kaṭal nīr velai *
pŏzhil al̤anta pul̤ ūrtic cĕlvaṉ ** - ĕzhil al̤antu aṅku
ĕṇṇaṟku ariyāṉai * ĕp pŏruṭkum ceyāṉai *
naṇṇaṟku ariyāṉai nām -7

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2288. O heart, come, let us worship the feet of the lord who measured the world surrounded with dark ocean. He rides on Garudā and flies around the groves. He is hard for anyone to understand by themselves and he is inapproachable for all.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! மனமே!; கார் கடல் கறுத்த கடலின்; நீர் நீரோடு கூடின; வேலை கரையையுடை; பொழில் அளந்த பூமியை அளந்தவனும்; புள் கருடனை; ஊர்தி வாகனமாக உடையவனும்; செல்வன் செல்வமுடையவனும்; எழில் அழகை; எண்ணற்கு எல்லை கொண்டு; அளந்த அங்கு அளக்க முடியாதவனும்; எப் பொருட்கும் எல்லா பொருள்களுக்கும்; சேயானை வெகு தூரத்திலிருப்பவனும்; நண்ணற்கு தம் முயற்சியால் யாராலும்; அரியானை அறியமுடியாதவனுமான; கழல் பெருமானின் திருவடிகளை; நாம் தொழுதும் வா நாம் வணங்குவோம் வா
nenjĕ ŏh mind!; kār kadal nīr having black coloured sea-water; vĕlai having shore; pozhil earth; al̤andha one who measured [the earth]; pul̤ ūrdhi one who has garuda as his vehicle; selvan one who has ṣrīdhĕvi (ṣrī mahālakshmi), the goddess of wealth [as his consort]; ezhil al̤andhu eṇṇarkariyānai one whose boundary for beauty cannot even be thought of; epporutkum sĕyānai one who is far away from any object; naṇṇaṛku ariyānai emperumān, who cannot be approached (by anyone through his/her efforts); kazhal divine feet; nām thozhudhum let us worship; you also agree and come