MUT 49

நரசிம்மனும் வாமனனும் கண்ணனும் ஒருவரே

2330 செற்றதுவும் சேராவிரணியனை * சென்றேற்றுப்
பெற்றதுவும் மாநிலம் பின்னைக்காய் * - முற்றல்
முரியேற்றின் முன்னின்றுமொய்ம்பொழித்தாய்! * மூரிச்
சுரியேறுசங்கினாய்! சூழ்ந்து.
2330 cĕṟṟatuvum * cerā iraṇiyaṉai * cĕṉṟu eṟṟup
pĕṟṟatuvum * mā nilam piṉṉaikku āy ** - muṟṟal
muri eṟṟiṉ * muṉ niṉṟu mŏym pŏzhittāy ! * mūric
curi eṟu caṅkiṉāy! cūzhntu -49

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2330. With curved conch in your hands, you fought with your enemy Hiranyan and killed him, you asked for three feet of land from Mahābali took over the earth and the sky, and you fought with seven bulls to marry Nappinnai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பின்னைக்கு ஆய் நப்பின்னைக்காக; முற்றல் வலிமையுள்ள; முரி ஏற்றின் ஓடும் எருதுகளின்; முன் நின்று முன் நின்று; சூழ்ந்து கொல்லும் வகையை ஆராய்ந்து; மொய்ம்பு அவற்றின் பலத்தை; ஒழித்தாய்! ஒழித்தவனே!; மூரிச்சுரி ஏறு சுழியுடன் கூடிய பெரிய; சங்கினாய்! சங்கை கையிலுடையவனே!; சேரா உன்னை எதிர்த்த; இரணியனை இரணியனை; செற்றதுவும் கொன்றவன் நீ அன்றோ?; சென்று மகாபலியிடம் சென்று; மா நிலம் ஏற்று பெரிய பூமியை யாசித்து; பெற்றதுவும்? பெற்றதுவும் நீ அன்றோ?
pinnaikkāy for the sake of nappinnai (incarnation of emperumān’s consort neel̤ā dhĕvi); muṝal being strong; muri running (here and there); ĕṝin the seven bulls’; mun ninṛu standing in front (without fear); sūzhndhu analysing (the way of killing them); moymbu ozhiththāy ŏh one who annihilated their strength!; mūri being large; suri ĕṛu being curved inside; sangināy ŏh one who is holding the conch in the divine hand!; sĕrā iraṇiyanai hiraṇya kashyap who could not live with you; seṝadhuvum (nī anṛĕ) was it not you who killed him!; senṛu going (to mahābali); mā nilam the expansive earth; ĕṝu taking as alms; peṝadhuvum (nī anṛĕ) was it not you who obtained that!