நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமே என்ன – பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் -(இவர் திருவாயால் சொல்லக் கேட்டு உகக்கும் தாய் அன்றோ )
(ஐந்து அபதானங்கள் இதில் உண்டே-கீழ் ஒன்றும் -இதில் ஐந்தும் -அடுத்ததில் நான்கும் -அடுத்ததில் இரண்டும் -அருளிச் செய்கிறார் )
நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய் நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் -நீ யன்றே மாவா யுரம் பிளந்து