MUT 43

கண்ணனின் வயிற்றில் இவ்வுலகம் அடங்கியது

2324 சினமாமத களிற்றின் திண்மருப்பைச்சாய்த்து *
புனமேயபூமியதனை * - தனமாகப்
பேரகலத்துள்ளொடுக்கும் பேராரமார்வனார் *
ஓரகலத்துள்ளதுலகு.
2324 ciṉa mā mata kal̤iṟṟiṉ * tiṇ maruppaic cāyttu *
puṉam meya pūmi ataṉai ** - taṉamākap
per akalattul̤ ŏṭukkum * per āra mārvaṉār *
or akalattu ul̤l̤atu ulaku -43

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2324. The lord who embraces the earth goddess on his chest and fought with the angry elephant Kuvalayābeedam and broke its tusks swallowed all worlds into his stomach.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சின மா கோபமுள்ள பெரிய; மத மதம் உடைய; களிற்றின் குவலயாபீட யானையின்; திண் மருப்பை திடமான தந்தத்தை; சாய்த்து ஒடித்தவனும்; புனம் நல்ல விளை; மேய நிலங்களோடு கூடின; பூமி அதனை பூமியை; தனமாக பரந்த; பேர் அகலத்துள் வயிற்றினுள்; ஒடுக்கும் வைத்துக் காத்தவனும்; பேர் ஆர பெரிய ஹாரங்கள் தரித்த; மார்வனார் மார்பையுடைய; ஓர் பெருமானின் ஸங்கல்ப வடிவ; அகலத்து ஞானத்தின் ஒர் பகுதியில்; உலகு உலகமெல்லாம்; உள்ளது நிலை பெற்று உள்ளது
sinam mā madha being angry and having huge exultation; kal̤iṝin the elephant (kuvalayāpīdam); thiṇ maruppai its strong tusks; sāyththu one who broke it; punam mĕya being together with arable land; bhūmi adhanai the earth; dhanam āga considering it as a gift; pĕr agalaththul̤ odukkum one who protected by keeping in his expansive stomach; pĕr āram mārvanār emperumān, who has donned huge chains on his chest, his; ŏr agalaththu in a part of his knowledge, which is in sankalparūpam (in the form of his will or solemn vow); ulagu ul̤l̤adhu all the worlds are existing