MUT 38

எல்லாம் திருமாலின் உருவமே

2319 தானேதனக்குவமன் தன்னுருவேயெவ்வுருவும் *
தானேதவவுருவும்தாரகையும் * - தானே
எரிசுடரும்மால்வரையும் எண்திசையும் * அண்டத்
திருசுடருமாயவிறை.
2319 tāṉe taṉakku uvamaṉ * taṉ uruve ĕv uruvum *
tāṉe tava uruvum tārakaiyum ** - tāṉe
ĕri cuṭarum māl varaiyum * ĕṇ ticaiyum * aṇṭattu
iru cuṭarum āya iṟai -38

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2319. He is all things that exist. The penance-performing Brahmā, Rishis, the stars, the bright fire, the mountains, the eight directions, the twin orbs, -all these are His body. Even though all forms in the world are his forms, he can be compared only to himself.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எவ் உருவும் எல்லாப் பொருள்களும்; தன் அவனுடைய; உருவே சரீரமாகவேயிருக்கும்; தவ தவ உருவமான; உருவும் பிரமன் முதலானவர்களும்; தாரகையும் நக்ஷத்திரங்களும்; தானே அவனுடைய சரீரமே; எரி சுடரும் சுடர் விடும் அக்னியும்; மால் வரையும் பெரிய மலைகளும்; எண் திசையும் எட்டு திக்குகளும்; அண்டத்து அண்டத்திலிருக்கும்; இரு சுடரும் சந்திர சூரியர்களும்; தானே ஆய தன் சரீரமாகப் பெற்ற; இறை பெருமான்; தனக்கு தானே தனக்கு தானே; உவமன் ஒப்பானவன்
evvuruvum all the entities [both sentient and insentient]; than uruvĕ will be part of his physical form; thavam uruvum entities such as brahmā et al, who carry out penance for a long time and obtain exalted physical forms; thāragaiyum the stars; thānĕ will be part of his physical form; eri sudarum the glowing agni (fire); māl varaiyum the huge mountains [which sustain the earth]; eṇ dhisaiyum all the directions; aṇdaththu belonging to this universe; irusudarum sun and moon; thānĕ āya iṛai emperumān, who has all these as his physical body; thanakku thānĕ uvaman is a simile for himself (since nothing else can be compared to him)