MUT 36

உலகளந்தவனின் ஐம்படைகள்

2317 கையகனலாழி கார்க்கடல்வாய்வெண்சங்கம் *
வெய்யகதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள் * செய்ய
படைபரவைபாழி பனிநீருலகம் *
அடியளந்த மாயரவற்கு.
2317 kaiya kaṉal āzhi * kārk kaṭal vāy vĕṇ caṅkam *
vĕyya katai cārṅkam vĕm cuṭar vāl̤ ** - cĕyya
paṭai paravai pāzhi * paṉi nīr ulakam *
aṭi al̤anta māyan avarkku -36

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2317. The dark ocean-colored Māyan who measured the world and the sky with his two feet and rests on the cool ocean carries a fiery discus in one hand, and a white conch in the other, and a heroic club, a bow and a shining sword.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பனி நீர் குளிர்ந்த நீரையுடைய; உலகம் கடல் சூழ்ந்த உலகங்களை; அடி அளந்த திருவடிகளால் அளந்த; மாயன் மாயனான; அவற்கு பெருமானுக்கு; கைய கனல் கையிலுள்ள சுடர்மிகு; ஆழி சக்கரமும்; கார்க் கடல் கருத்த கடலில்; வாய் தோன்றிய; வெண் சங்கம் வெண் சங்கும்; வெய்ய வெம்மையையுடைய; கதை கதையும்; சார்ங்கம் சார்ங்க வில்லும்; வெம் சுடர் வெம்மையான ஒளியுடைய; வாள் நாந்தக வாளும்; செய்ய ஆகியவை அழகிய; படை ஆயுதங்களாம்; பரவை பாழி கடலானது படுக்கையாம்
pani nīr ulagam world surrounded by cool waters; adi with his divine feet; al̤andha one who measured; māyar avarkku for that emperumān who has amaśing activities; kaiya in the hand; kanal āzhi the divine disc which is radiant; kār kadal vāy veṇ sangam the white coloured divine conch which appeared in the dark ocean; veyya valorous; gadhai mace; (veyya) valorous; sārngam the bow sārngam; vem sudar vāl̤ the sword nāndhagam which has radiant glow; seyya padai are the divine weapons; paravai the ocean; pāzhi is the mattress