MUT 15

அரவணையான் என் மனத்தில் தங்குகிறான்

2296 பணிந்துயர்ந்தபௌவப் படுதிரைகள்மோத *
பணிந்தபணமணிகளாலே - அணிந்து * அங்கு
அனந்தனணைக் கிடக்குமம்மான் * அடியேன்
மனந்தனணைக்கிடக்கும்வந்து.
2296 paṇintu uyarnta pauvap * paṭu tiraikal̤ mota *
paṇinta paṇa maṇikal̤āle - aṇintu ** aṅku
aṉantaṉ aṇaik * kiṭakkum ammāṉ * aṭiyeṉ
maṉam taṉ aṇaik kiṭakkum vantu -15

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2296. Our father, resting on the ocean rolling with waves on Adisesha whose head bears jewels, came and stays in my heart and I became his slave.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பணிந்து தாழ்ந்தும்; உயர்ந்த உயர்ந்தும் வீசும்; பௌவப் படு கடல்; திரைகள் மோத அலைகள் மோத; பணிந்த அத்திவலைகள் திருமேனியில் படாதபடி; பண குடை போல் கவிழ்ந்துருக்கும்; மணிகளாலே படங்களின் மாணிக்கங்களினாலே; அணிந்து அலங்கரிக்கப்பட்ட; அனந்தன் ஆதிசேஷனான; அணை படுக்கையில்; கிடக்கும் சயனித்திருக்கும்; அம்மான் எம்பெருமான்; அங்கு வந்து அங்கிருந்து வந்து; அடியேன் மனம் தன் அடியேன் மனதில்; அணை சயனித்திருக்கிறான்; கிடக்கும் என்னே என் பேறு!
paṇindhu uyarndha agitating by rising and falling; pauvam paduthiraigal̤ waves which form in the ocean; mŏdha striking on all sides; paṇindha (ensuring that the droplets from those waves do not fall on the divine form, like an umbrella) bowed down; paṇam formed by the hoods; maṇigal̤ālĕ by the carbuncles; aṇindha decorated; ananthan thiruvanthāzhwān (ādhiṣĕshan); aṇai on the divine mattress; ammān supreme being; angu there; vandhu reaching [from there]; adiyĕn than in my; manam aṇai the mattress of my mind; kidakkum reclined