முதல்திருவந்தாதி தனியன்கள் / 1st Thiruvandāthi taṉiyaṉkal̤

கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த *
பொய்கைப் பிரான் கவிஞர் போரேறு * - வையத்து
அடியவர் வாழ அருந் தமிழந்தாதி *
படி விளங்கச் செய்தான் பரிந்து

kaitai cer pūm pŏḻil cūḻ kacci nakar vantutitta *
pŏykaip pirāṉ kaviñar poreṟu * - vaiyattu
aṭiyavar vāḻa arun tamiḻantāti *
paṭi vil̤aṅkac cĕytāṉ parintu
முதலியாண்டான் / mutaliyāṇṭāṉ

Word by word meaning

அரும் தமிழ் அரிய தமிழ் நூலான; கைதை சேர் தாழம்பூச் செடிகள் நிறைந்த; பூம்பொழில் சூழ் அழகிய சோலைகளால் சூழ்ந்த; கச்சி நகர் காஞ்சீபுரத்தில்; வந்து உதித்த அவதரித்த; பொய்கைப்பிரான் பொய்கைப்பிரான் என்னும்; கவிஞர் போரேறு கவிஞரான காளை போன்றவர்; வையத்து இவ்வுலகத்திலுள்ள; அடியவர்கள் வாழ அடியார்கள் வாழ; நூற்று அந்தாதி நூற்று அந்தாதியை; பரிந்து படி இவ்வுலகில் அன்புடன்; விளங்க செய்தான் அருளிச்செய்தார்