MLT 53

ஆதிசேஷனின் தொண்டு

2134 சென்றால்குடையாம் இருந்தால்சிங்காசனமாம் *
நின்றால்மரவடியாம் நீள்கடலுள் * - என்றும்
புணையாம்மணிவிளக்காம் பூம்பட்டாம்புல்கும்
அணையாம் * திருமாற்குஅரவு. (2)
2134 ## cĕṉṟāl kuṭai ām * iruntāl ciṅkācaṉam ām *
niṉṟāl maravaṭi ām nīl̤ kaṭalul̤ ** ĕṉṟum
puṇai ām maṇi vil̤akku ām * pūm paṭṭu ām pulkum
aṇai ām * tirumāṟku aravu -53

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2134. When Thirumāl walks the snake ādisesha is his umbrella, when he sits he is a throne for him and he is his sandals when he stands. He is a floating bed for the god on the ocean always, a beautiful lamp, a soft silky dress, and the pillow the lord loves to rest on.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருமாற்கு பிராட்டியுடன் கூடிய பெருமானுக்கு; அரவு ஆதி சேஷன்; சென்றால் உலாவும்போது; குடையாம் குடையாக இருப்பான்; இருந்தால் அமரும்போது; சிங்காசனமாம் சிங்காசனமாவான்; நின்றால் நின்றால்; மரவடியாம் பாதுகை ஆவான்; நீள் கடலுள் பரந்த கடலில்; என்றும் துயுலும்போதெல்லாம்; புணையாம் தெப்பமாவான்; மணி விளக்காம் மங்கள தீபமாக இருப்பான்; பூம்பட்டாம் அழகிய திருப்பரிவட்டமாவான்; புல்கும் தழுவிக்கொள்ளும்; அணையாம் தலை அணையுமாவன்
thirumāṛku for emperumān who is with pirātti (ṣrī mahālakshmi); aravu thiruvananthāzhwān (ādhi ṣĕshan); senṛāl kudaiyām is an umbrella when (emperumān) goes out; irundhāl singāsanamām (he) is the throne when he sits; ninṛāl when emperumān stands; maravadiyām (he) is the divine sandals; nīl̤ kadalul̤ in the expansive ocean; enṛum whenever emperumān reclines; puṇaiyām (he) is the float; maṇi vil̤akkām (he) is the auspicious lamp; pūm pattam (he) is the beautiful divine dress; pulgum aṇaiyām (he) is the pillow that emperumān embraces

Detailed WBW explanation

senṛāl kudaiyām – When Ēmperumāṇ ventures forth, Thiruvananthāzhvān, assuming forms that best serve His needs, becomes His divine umbrella. In the ethos of servitude, Ādiśeṣa does not dictate His desires to Ēmperumāṇ, such as requesting to transform into an umbrella. Instead, he morphs into one seamlessly as Ēmperumāṇ steps out, embodying the ideal that service to

+ Read more