அமலனாதிபிரான் தனியன்கள் / Amalanādipirān taṉiyaṉkal̤

காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை யுந்தி *
தேட்டருமுதர பந்தம் திருமார்வு கண்டம் செவ்வாய் *
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து *
பாட்டினாற் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே

kāṭṭave kaṇṭa pāta kamalam nallāṭai yunti *
teṭṭarumutara pantam tirumārvu kaṇṭam cĕvvāy *
vāṭṭamil kaṇkal̤ meṉi muṉiyeṟit taṉi pukuntu *
pāṭṭiṉāṟ kaṇṭu vāḻum pāṇar tāl̤ paraviṉome
திருமலை நம்பிகள் / tirumalai nampikal̤
Kaattave-Kanda

Word by word meaning

முனி ஏறி லோகஸாரங்க முனிவரின் தோள் மீது ஏறி; தனிப்புகுந்து தனியே உள்ளே புகுந்து; காட்டவே காண்பித்தவாறே; கண்ட கண்டு வணங்கிய; பாட்டினால் பாசுரங்களையும் பாடிக்கொண்டு ஆனந்தித்து; பாத கமலம் தாமரை போன்ற திருவடிகளும்; நல்லாடை உந்தி பீதாம்பரமும், நாபியும்; தேட்டரும் உதர பந்தம் அரிய அரை நாணும்; திருமார்பு திருமகள் வாழும் மார்பும்; கண்டம் கழுத்தும்; செவ்வாய் சிவந்த அதரமும்; வாட்டரில் கண்கள் சோர்வு இல்லாத கண்களும்; மேனி ஆகிய இவற்றோடு திருமேனியை; கண்டு வாழும் பாணர் அனுபவித்த ஆழ்வாரின்; தாள் திருவடிகளை; பரவினோமே துதித்து வணங்கப் பெற்றோம்