திருவாய்மொழி தனியன்கள் / Thiruvāymozhi taṉiyaṉkal̤

ஏய்ந்த பெருங் கீர்த்தி இ ராமானுச முனி தன் *
வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன் * ஆய்ந்த பெருஞ்ச் சீரார்
சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் *
பேராதவுள்ளம் பெற

ēynda peruṅ gīrtti irāmānuśamuni tan⋆
vāynda malarppādam vaṇaṅguginṟēn ⋆ āynda perum śīrār
śaḍagōban śendamiz vēdam tarikkum ⋆
pērāda uḻḻam peṟa
அனந்தாழ்வான் / aṉantāḻvāṉ
Yehindha-1
Yehindha-2

Word by word meaning

ஆய்ந்த பெரும் குற்றமற்ற நற்குணங்களினால்; சீரார் சிறப்பு மிகுந்த; சடகோபன் நம்மாழ்வார் அருளிச்செய்த; செந்தமிழ் வேதம் செந்தமிழ் திராவிட வேதத்தை; தரிக்கும் மனதில் கொள்ள வல்லமை பெற்றிட; பேராத அதைத் தவிர வேறு ஒன்றையும் நினைக்காத; உள்ளம் பெற மனம், பெறும் பொருட்டு; ஏய்ந்த பெரும் கீர்த்தி பெரும் புகழை உடைய; இராமானுச முனிதன் இராமானுசரின்; வாய்ந்த மலர்ப்பாதம் திருவடித்தாமரைகளை; வணங்குகின்றேன் வணங்குகின்றேன்