தனியன் / Taniyan

திருவாய்மொழி தனியன்கள் / Thiruvāymozhi taṉiyaṉkal̤

பக்தாம்ருதம் விஸ்வ ஜநாநு மோதநம் *
ஸர்வார்த்த தம் ஸ்ரீசடகோப வாங்க் மயம் *
ஸஹஸ்ர ஸாகோப நிஷத் ஸமாகமம் *
நமாம் யஹம் த்ராவிட வேத ஸாகரம்

paktāmrutam visva janānu motanam *
sarvārtta tam śrīcaṭakopa vāṅk mayam *
sahasra sākopa niṣat samākamam *
namām yaham trāviṭa veta sākaram
நாதமுனிகள் / nātamuṉikal̤
Bhakthamrudham-1
Bhakthamrudham-2
Bhakthamrudham-3

Word by word meaning

भक्तामृतं தொண்டர்களுக்கு அமுதம் போன்றதும்; विश्वजन அனைத்து மக்களுக்கும்; अनुमोदनं தொடர்ந்து ஆனந்தத்தை அளிப்பதும்; सर्वार्थदं எல்லாவித செல்வங்களையும் அளிக்க வல்லதும்; सहस्रशाक ஆயிரக்கணக்கான கிளைகளை உடைய; उपनिषत्समागमं உபனிஷ்தங்களுக்கு சாமமானதும்; श्रीशठकोप நம்மாழ்வாரின்; वांग्मयम् திருவாய்மொழியான; द्राविडवेदसागरम् தமிழ் வேதக் கடலை அளித்த; अहं नमामि நம்மாழ்வாரை நான் வணங்குகிறேன்

திருவாய்மொழி தனியன்கள் / Thiruvāymozhi taṉiyaṉkal̤

திருவழுதி நாடென்றும் தென்குருகூரென்றும் *
மருவினிய வண் பொருநலென்றும் *
அருமறைகள் அந்தாதி செய்தானடியிணையே எப்பொழுதும் *
சிந்தியாய் நெஞ்சே! தெளிந்து

tiruvaḻuti nāṭĕṉṟum tĕṉkurukūrĕṉṟum *
maruviṉiya vaṇ pŏrunalĕṉṟum *
arumaṟaikal̤ antāti cĕytāṉaṭiyiṇaiye ĕppŏḻutum *
cintiyāy nĕñce! tĕl̤intu
ஈச்வரமுனிகள் / īcvaramuṉikal̤
ThiruvazhudhiNaadu

Word by word meaning

நெஞ்சே! மனமே!; திருவழுதி நாடென்றும் திருவழுதி நாடு என்றும்; தென் குருகூர் என்றும் தென் குருகூர் என்றும்; மருவினிய விரும்பியபடி அழகிய இனிய; வண்பொரு தாமிரபரணி என்ற; நல் என்றும் நல்ல ஆற்றை உடையது என்றும்; அருமறைகள் அருமையான வேதங்களை; அந்தாதி அந்தாதி இலக்கண்ப்படி; செய்தான் அருளிச்செய்த ஆழ்வாரின்; அடியிணையே திருவடிகளையே; எப்பொழுதும் எப்பொழுதும்; சிந்தியாய் தெளிந்து தெளிந்து சிந்தித்து வணங்குவாயாக

திருவாய்மொழி தனியன்கள் / Thiruvāymozhi taṉiyaṉkal̤

மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும்
இனத்தாரையல்லா திறைஞ்சேன் *
தனத்தாலும் ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன் *
பாதங்கள் யாமுடைய பற்று

maṉattālum vāyālum vaṇ kurukūr peṇum
iṉattāraiyallā tiṟaiñceṉ *
taṉattālum etuṅ kuṟaivileṉ ĕntai caṭakopaṉ *
pātaṅkal̤ yāmuṭaiya paṟṟu
சொட்டைநம்பிகள் / cŏṭṭainampikal̤
Manaththaalum

Word by word meaning

குறைவிலேன் குறையும் எனக்கு இல்லை; மனத்தாலும் மனதினாலும்; வாயாலும் வாக்கினாலும், சரீரத்தாலும்; பேணும் வைத்த மாநிதி என்று பணியவும்; வண்குருகூர் சிறந்த திருகுருகூரை; இனத்தாரை சேர்ந்தவர்களைத் தவிர; அல்லாது மற்றவர்களை; இரைஞ்சேன் வணங்கமாட்டேன்; எந்தை எங்கள் ஸ்வாமியான; சடகோபன் நம்மாழ்வாருடைய; பாதங்கள் திருவடிகளை; யாமுடைய பற்று பற்றுவதினால்; தனத்தாலும் செல்வத்தினாலும்; ஏதும் எந்தவித

திருவாய்மொழி தனியன்கள் / Thiruvāymozhi taṉiyaṉkal̤

ஏய்ந்த பெருங் கீர்த்தி யிராமானுச முனி தன் *
வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன் * -
ஆய்ந்த பெருஞ்ச் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் *
பேராதவுள்ளம் பெற

eynta pĕruṅ kīrtti yirāmāṉuca muṉi taṉ *
vāynta malarp pātam vaṇaṅkukiṉṟeṉ * -
āynta pĕruñc cīrār caṭakopaṉ cĕntamiḻ vetam tarikkum *
perātavul̤l̤am pĕṟa
அனந்தாழ்வான் / aṉantāḻvāṉ
Yehindha-1
Yehindha-2

Word by word meaning

ஆய்ந்த பெரும் குற்றமற்ற நற்குணங்களினால்; சீரார் சிறப்பு மிகுந்த; சடகோபன் நம்மாழ்வார் அருளிச்செய்த; செந்தமிழ் வேதம் செந்தமிழ் திராவிட வேதத்தை; தரிக்கும் மனதில் கொள்ள வல்லமை பெற்றிட; பேராத அதைத் தவிர வேறு ஒன்றையும் நினைக்காத; உள்ளம் பெற மனம், பெறும் பொருட்டு; ஏய்ந்த பெரும் கீர்த்தி பெரும் புகழை உடைய; இராமானுச முனிதன் இராமானுசரின்; வாய்ந்த மலர்ப்பாதம் திருவடித்தாமரைகளை; வணங்குகின்றேன் வணங்குகின்றேன்

திருவாய்மொழி தனியன்கள் / Thiruvāymozhi taṉiyaṉkal̤

வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல் *
ஆன்ற தமிழ் மறைகளாயிரமும் *
ஈன்ற முதல் தாய் சடகோபன் * மொய்ம் பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்

vāṉ tikaḻum colai matil̤araṅkar vaṇpukaḻ mel *
āṉṟa tamiḻ maṟaikal̤āyiramum *
īṉṟa mutal tāy caṭakopaṉ * mŏym pāl val̤artta
itattāy irāmuṉucaṉ
பட்டர் / paṭṭar
Vaanthigazhum-1
Vaanthigazhum-2

Word by word meaning

வான் திகழும் ஆகாசத்தளவு ஓங்கி வளர்ந்த; சோலை சோலைகளையும்; மதிள் மதிள்களையும் உடைய; அரங்கர் ஸ்ரீரங்கத்தில் சயனித்திருக்கும் பெருமானின்; வண்புகழ் கல்யாண குணங்களை; மேல் ஆன்ற பற்றி அமைந்த; தமிழ் மறைகள் தமிழ் வேதமான, திருவாய்மொழி; ஆயிரமும் ஆயிரம் பாசுரங்களையும்; ஈன்ற முதல் தாய் பெற்றெடுத்த தாயார்; சடகோபன் நம்மாழ்வார் ஆவார்; மொய்ம்பால் மிடுக்குடனே; வளர்த்த அதை போஷித்து வளர்த்து; இதத்தாய் அருளின தாயார்; ராமானுசன் இராமானுசன் ஆவார்

திருவாய்மொழி தனியன்கள் / Thiruvāymozhi taṉiyaṉkal̤

மிக்க விறை நிலையும் மெய்யாமுயிர் நிலையும் *
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும் *
ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன் *
யாழினிசை வேதத் தியல்

mikka viṟai nilaiyum mĕyyāmuyir nilaiyum *
takka nĕṟiyum taṭaiyākit - tŏkkiyalum *
ūḻ viṉaiyum vāḻ viṉaiyum otum kurukaiyar koṉ *
yāḻiṉicai vetat tiyal
பட்டர் / paṭṭar
MikkaIrainilai-1
MikkaIrainilai-2
MikkaIrainilai-3
MikkaIrainilai-4
MikkaIrainilai-5
MikkaIrainilai-6
MikkaIrainilai-7

Word by word meaning

குருகையர் திருக்குருகூரிலுள்ள; கோன் ஆழ்வார் அருளிச்செய்த; யாழ் இசை யாழினும் இனிய இசை போன்ற; வேதத்து இயல் திருவாய்மொழிப் பாசுரங்கள்; மிக்க இறை எம்பெருமானின்; நிலையும் இயல்பையும்; மெய்யாம் ஜீவாத்மாவின்; உயிர் நிலையும் இயல்பையும்; தக்க ஜீவாத்மா அவனை அடையும்; நெறியும் உபாயத்தையும்; தடையாகி அவனை அடைய தடையாக இருக்கும்; ஊழ்வினையும் முன் வினைகளாகிற; தொக்கு இயலும் விரோதிகளைப் பற்றியும்; வாழ்வினையும் வாழ்வாகிற மோக்ஷத்தைப் பற்றியும்; ஓதும் உபதேசிக்கின்றது

திருவாய்மொழி நூற்றந்தாதி தனியன்கள் / Thiruvāymozhi Nutrandāthi taṉiyaṉkal̤

அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்களுக்குச்,
சொல்லும் பொருளும் தொகுத்து உரைத்தான்,-நல்ல
மணவாள மாமுனிவன் மாறன் மறைக்குத்,
தணவா நூற்றந்தாதி தான்

allum pakalum aṉupavippār taṅkal̤ukkuc,
cŏllum pŏrul̤um tŏkuttu uraittāṉ,-nalla
maṇavāl̤a māmuṉivaṉ māṟaṉ maṟaikkut,
taṇavā nūṟṟantāti tāṉ
மணவாள மாமுனிகள் / maṇavāl̤a māmuṉikal̤

Word by word meaning

அல்லும் பகலும் இரவும் பகலும் எப்பொழுதும்; அனுபவிப்பார் நெஞ்சு இருள் இரும்படி அனுபவிக்க; தங்களுக்கு விரும்புபவர்களுக்காக; சொல்லும் இனிமையான சொற்களையும்; பொருளும் பொருளையும்; தொகுத்து தொகுத்து; உரைத்தான் உரைத்தான்; நல்ல நனமையை விரும்பிய; மணவாள மா முனிவன் மணவாள மா முனிகள்; மாறன் நம்மாழ்வார் அருளிச்செய்த; மறைக்கு வேதமான திருவாய்மொழிக்கு; தணவா மிகவும் பொருந்திய; நூற்றந்தாதி தான் நூற்றந்தாதியை ஸங்கிரகமாக அருளிச்செய்தார்

திருவாய்மொழி நூற்றந்தாதி தனியன்கள் / Thiruvāymozhi Nutrandāthi taṉiyaṉkal̤

மன்னு புகழ்சேர் மணவாள மாமுனிவன்,
தன்னருளால் உட்பொருள்கள் தம்முடனே-சொன்ன,
திருவாய் மொழி நூற்றந்தாதியாம் தேனை,
ஒருவா தருந்து நெஞ்சே! உற்று
மணவாள மாமுனிகள் / maṇavāl̤a māmuṉikal̤

Word by word meaning

உட்பொருள்கள் ஆழ்ந்த கருத்துக்கள்; தன்னுடனே அமையும்படி; சொன்ன அருளிச்செய்த; திருவாய்மொழி திருவாய்மொழி; நூற்றந்தாதியாம் நூற்றந்தாதி; தேனை தேனை; ஒருவாது இடைவிடாமல்; உற்று அருந்து ஊன்றி பருக்கடவாய்; தேனை தேனை; ஒருவாது இடைவிடாமல்; உற்று அருந்து ஊன்றி பருக்கடவாய்; நெஞ்சே! நெஞ்சே!; மன்னு நிலை பெற்ற; புகழ்சேர் புகழை உடையவரான; மணவாள மா முனிவன் மணவாள மா முனிவன்; தன்னருளால் தன் அருளால்