தனியன் / Taniyan

பெரியதிருமடல் தனியன்கள் / Periya Thirumaḍal taṉiyaṉkal̤

பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றி செய்யும் *
நன்னுதலீர்! நம்பி நறையூரர் * - மன்னுலகில்
என்னிலைமை கண்டும் இரங்காரே யாமாகில் *
மன்னு மடலூர் வன் வந்து

pŏṉṉulakil vāṉavarum pūmakal̤um poṟṟi cĕyyum *
naṉṉutalīr! nampi naṟaiyūrar * - maṉṉulakil
ĕṉṉilaimai kaṇṭum iraṅkāre yāmākil *
maṉṉu maṭalūr vaṉ vantu
பிள்ளை திருநறையூர் அறையர் / pil̤l̤ai tirunaṟaiyūr aṟaiyar

Word by word meaning

நல் நுதலீர்! அழகிய நெற்றியை உடைய மாதர்களே!; பொன்னுலகில் பரமபதத்தில்; வானவரும் நித்யஸூரிகளாலும்; பூமகளும் திருமகளாலும்; போற்றிச் செய்யும் வணங்கப் பெற்ற; நறையூரர் திருநறை ஊரில் இருப்பவரும்; நம்பி கல்யாண குணங்களை உடையவருமான; மன் உலகில் பெருமான் இந்த பூமியில்; என்னிலைமை என்னுடைய இந்த துயறத்தை; கண்டும் கண்ட பின்பும்; இறங்காரே ஆம் ஆகில் கிருபை செய்யாவிடில்; வந்து அனைத்து ஊர்களிலும் வந்து; மடலூர்வன் மடல் ஊர்ந்துகொண்டே இருப்பேன்; மன்னு தினமும்