PT 9.1.10

இவற்றைப் படித்தால் வறுமையே வராது

1757 கலையுலாவல்குல்காரிகைதிறத்துக்
கடல்பெரும்படையொடும்சென்று *
சிலையினால்இலங்கைதீயெழச்செற்ற
திருக்கண்ணங்குடியுள்நின்றானை *
மலைகுலாமாடமங்கையர்தலைவன்
மானவேல்கலியன்வாயொலிகள் *
உலவுசொல்மாலைஒன்பதோடொன்றும்
வல்லவர்க்குஇல்லைநல்குரவே. (2)
1757 ## kalai ulā alkul kārikaitiṟattuk *
kaṭal pĕrum paṭaiyŏṭum cĕṉṟu *
cilaiyiṉāl ilaṅkai tī ĕzhac cĕṟṟa *
tirukkaṇṇaṅkuṭiyul̤ niṉṟāṉai **
malai kulām māṭa maṅkaiyar talaivaṉ *
māṉa vel kaliyaṉ vāy ŏlikal̤ *
ulavu cŏl-mālai ŏṉpatoṭu ŏṉṟum *
vallavarkku illai-nalkurave-10

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1757. Kaliyan, the poet with a strong spear, the king of Thirumangai surrounded with mountain-like palaces, composed a garland of ten Tamil pāsurams on the god of Thirukkannangudi who went to Lankā with a large ocean-like army of monkeys, and, shooting arrows, burned Lankā and brought back his lovely-waisted wife Sita. If devotees learn and recite these ten pāsurams they will have no troubles in their lives.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கலை உலா ஆடை அழகுடன் கூடின; அல்குல் இடையும் உடைய; காரிகை திறத்து அழகிய ஸீதைக்காக; கடல் பெரும் கடலைக்காட்டிலும் பெரிய; படையொடும் சென்று படையோடு சென்று; சிலையினால் இலங்கை வில்லால் இலங்கை; தீ எழச் செற்ற தீப் பற்றி எரியும்படி அழித்த; திருக்கண்ணங்குடியுள் திருக்கண்ணங்குடியுள்; நின்றானை நின்ற பெருமானைக் குறித்து; மலை குலாம் மலை போன்ற; மாட மாடங்களையுடைய; மங்கையர் திருமங்கை; தலைவன் தலைவன்; மான வேல் சிறந்த வேற்படையுடைய; கலியன் திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த; உலவு சொல் மாலை சிறந்த இந்த; வாய் ஒலிகள் குறைவற்ற பாசுரங்களை; ஒன்பதோடு ஒன்றும் பத்துப் பாசுரங்களையும்; வல்லவர்க்கு ஓத வல்லவர்க்கு; இல்லை நல்குரவே இறைவன் அருள் என்றும் உள்ளது