பெருமாள் திருமொழி தனியன்கள் / pĕrumāl̤ tirumŏḻi taṉiyaṉkal̤

ஆரம் கெடப்பரனன்பர் கொள்ளாரென்று * அவர்களுக்கே
வாரங் கொடு குடப்பாம்பில் கையிட்டவன் * மாற்றலரை
வீரங் கெடுத்த செங்கோற் கொல்லி காவலன் வில்லவர் கோன் *
சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே

āram kĕṭapparaṉaṉpar kŏl̤l̤ārĕṉṟu * avarkal̤ukke
vāraṅ kŏṭu kuṭappāmpil kaiyiṭṭavaṉ * māṟṟalarai
vīraṅ kĕṭutta cĕṅkoṟ kŏlli kāvalaṉ villavar koṉ *
ceraṉ kulacekaraṉ muṭiventar cikāmaṇiye
மணக்கால் நம்பி / maṇakkāl nampi
PMT.T.2-1
PMT.T.2-2
PMT.T.2-3

Word by word meaning

அவர்களுக்கே அடியார்கள் விஷயத்தில்; வாரம் கொடு பக்ஷபாதம் பூண்டு; குடப்பாம்பில் பாம்புக் குடத்தில்; கை இட்டவன் கை இட்டவர்; மாற்றலரை விரோதிகளின்; வீரம் கெடுத்த வீர்யத்தைக் கெடுத்த; செங்கோல் செங்கோலை உடைய; கொல்லி காவலன் கொல்லி நகருக்கு தலைவரான; வில்லவர் மற்றுமுள்ள அரசர்களுக்கும்; கோன் அதிபதியான; சேரன் குலசேகரன் சேரகுலத்து குலசேகரன்; முடி வேந்தர் முடி சூட்டின அரசர்களுக்கு; சிகாமணியே சிகாமணி போன்று குலசேகரப்பெருமாள் ஆவர்; கொள்ளார் களவு செய்யமாட்டார்கள்; ஆரம் மந்திரிகளின் சூழ்ச்சியால் ஹாரம்; கெட காணாமல் போக; பரன் அன்பர் வைதிகர்கள்; என்று என்று சொல்லி