பெருமாள் திருமொழி தனியன்கள் / pĕrumāl̤ tirumŏḻi taṉiyaṉkal̤

இன்னமுதமூட்டுகேன் இங்கே வா பைங்கிளியே! *
தென்னரங்கம் பாட வல்ல சீர்ப்பெருமாள் * பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர் கோன் * எங்கள்
குலசேகரன் என்றே கூறு

iṉṉamutamūṭṭukeṉ iṅke vā paiṅkil̤iye! *
tĕṉṉaraṅkam pāṭa valla cīrppĕrumāl̤ * pŏṉṉañ
cilaicer nutaliyarvel̤ ceralar koṉ * ĕṅkal̤
kulacekaraṉ ĕṉṟe kūṟu
உடையவர் / uṭaiyavar
PMT.T.1-1
PMT.T.1-2
PMT.T.1-3
PMT.T.1-4

Word by word meaning

பைங்கிளியே! பச்சை நிற கிளியே!; இன்னமுதம் இனிமையான அமுதத்தை உண்ண; ஊட்டுகேன் கொடுக்கிறேன்; இங்கேவா என் அருகில் வருவாயாக; தென்னரங்கம் தென் திருவரங்கத்தைக் குறித்து; பாடவல்ல இனிய கவிதைகள் அருளிச்செய்யவல்லவரான; சீர் கல்யாண குணங்கள் நிறைந்த; பெருமாள் பெருமாள் என்ற திருநாமத்தை உடையவரும்; பொன்னின் சிலை சேர் வில் போன்ற புருவமுடையவரும்; நுதலியர் வேள் பெண்களுக்கு மன்மதன் போன்றவரும்; சேரலர்கோன் சேரகுல அரசரும்; எங்கள் குல சேகரன் எங்கள் குலத்துக்கு பூஷணமானவர்; என்றே கூறு என்றே வாயாரக் கூறு