கனம் குழையாள் பொருட்டாகக் கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம் இராமன் மலை கனம் கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம் இனம் குழு ஆடும் மலை எழில் மால் இரும் சோலை யதே –4-3-7-
பதவுரை
கனம்–ஸ்வர்ண மயமான குழையாள் பொருட்டா–காதணியை யுடையாளான கணை–அம்புகளை பாரித்து–பிரயோகித்து அரக்கர்கள் இனம்–ராஷஸ குலத்தை கழு ஏற்றுவித்து–சூலத்தின் மேல் ஏற்றின