PAT 4.3.6

வண்டுகள் பாடும் திருமாலிருஞ்சோலை மலை

354 பாண்டவர்தம்முடைய பாஞ்சாலிமறுக்கமெல்லாம் *
ஆண்டுஅங்குநூற்றுவர்தம் பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை *
பாண்தகுவண்டினங்கள் பண்கள்பாடிமதுப்பருக *
தோண்டலுடையமலை தொல்லைமாலிருஞ்சோலையதே.
354 pāṇṭavar tammuṭaiya * pāñcāli maṟukkam ĕllām *
āṇṭu aṅku nūṟṟuvartam * pĕṇṭir mel vaitta appaṉ malai **
pāṇ taku vaṇṭiṉaṅkal̤ * paṇkal̤ pāṭi matup paruka *
toṇṭal uṭaiya malai * tŏllai māliruñ colaiyate (6)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

354. Thirumāliruncholai is the mountain of Lord Krishna who made the hundred wives of the Kauravās suffer for their injustice and relieved Panchali's sufferings This ancient southern Thirumālirunjolai, is the hill of the divine lord, where a swarm of beautiful bees sings lovely songs and drinks honey.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாண் தகு பாடத் தகுதியுடைய; வண்டினங்கள் வண்டின் திரள்கள்; பண்கள் பாடி பண்களைப் பாடிக்கொண்டு; மதுப் பருக தேனை அருந்த; தோண்டல்உடைய மலை ஊற்றுக்களையுடைய மலை; தொல்லை அநாதியான; மாலிருஞ் சோலையதே மாலிருஞ் சோலைதான்; பாண்டவர் தம்முடைய பஞ்சபாண்டவர்களுடைய; பாஞ்சாலி மனைவியான திரௌபதியின்; மறுக்கம் எல்லாம் மனக் குழப்பத்தையெல்லாம்; ஆண்டு அங்கு மனதில் கொண்டு அப்போது; நூற்றுவர்தம் துரியோதனாதிகள் நூற்றுவருடைய; பெண்டிர்மேல் வைத்த மனைவியர்களின் மேல் சுமத்திய; அப்பன்மலை கண்ணபிரானின் மலையானது
māliruñ colaiyate it is Thirumalirunjolai that is an; tŏllai everlasting; toṇṭaluṭaiya malai mountain with springs; vaṇṭiṉaṅkal̤ where swarms of bees; pāṇ taku qualified to sing; paṇkal̤ pāṭi sing songs; matup paruka and drink honey; appaṉmalai its the mountain of Kannan; āṇṭu aṅku who took away; maṟukkam ĕllām the mental suffering; pāñcāli from Draupadi, the wife of; pāṇṭavar tammuṭaiya the Pandavas; pĕṇṭirmel vaitta and moved it to; nūṟṟuvartam the wives of Kauravās