PAT 4.3.5

அழகன் அலங்காரன் மலை திருமாலிருஞ்சோலை மலை

353 பலபலநாழம்சொல்லிப்பழித்த சிசுபாலன்தன்னை *
அலவலைமைதவிர்த்த அழகன்அலங்காரன்மலை *
குலமலைகோலமலை குளிர்மாமலைகொற்றமலை *
நிலமலைநீண்டமலை திருமாலிருஞ்சோலையதே. (2)
353 pala pala nāzham cŏllip * pazhitta cicupālaṉ taṉṉai *
alaivalaimai tavirtta * azhakaṉ alaṅkāraṉ malai **
kula malai kola malai * kul̤ir mā malai kŏṟṟa malai *
nila malai nīṇṭa malai * tirumāliruñ colaiyate (5)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

353. This is the abode of the charming Lord who destroyed the meanness of Sisupalan, who heaped abuses on Krishna Thirumālirunjolai is a majestic mountain, beautiful, flourishing, victorious, the greatest and highest mountain on earth.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குல மலை தொண்டர் குலத்து மலையாகவும்; கோல மலை அழகிய மலையாகவும்; குளிர் மா மலை குளிர்ந்த பெரிய மலையாகவும்; கொற்ற மலை வெற்றியையுடைய மலையாகவும்; நில மலை பாங்கான நிலத்தையுடைய மலையாகவும்; நீண்ட மலை நீண்ட மலையாகவும் நிற்கும்; திருமாலிருஞ் சோலையதே திருமாலிருஞ் சோலையே; பல பல நாழம் பலபல குற்றங்களை; சொல்லி வாயாரச் சொல்லி; பழித்த நிந்தனை செய்த; சிசுபாலன்தன்னை சிசுபாலனுடைய; அலைவலைமை அற்பத்தனத்தை; தவிர்த்த போக்கியருளின அழகனான; அலங்காரன் அலங்காரனான; அழகன் மலை அழகன் கண்ணன் மலை
tirumāliruñ colaiyate it is Thirumalirunjolai that is a; kula malai mountain for devotees and it is; kola malai beautiful; kŏṟṟa malai victorous; nila malai spread across the land; nīṇṭa malai high; kul̤ir mā malai cool and big; aḻakaṉ malai its the mountain of Kannan; alaṅkāraṉ who; tavirtta destroyed the; alaivalaimai meanness of; cicupālaṉtaṉṉai Sisupalan; paḻitta who; cŏlli verbally; pala pala nāḻam abused Kannan