PAT 4.3.3

பொன்னரிமாலைகள் சூழ் பொழில் மாலிருஞ்சோலை

351 மன்னுநரகன்தன்னைச் சூழ்போகிவளைத்தெறிந்து *
கன்னிமகளிர்தம்மைக் கவர்ந்தகடல்வண்ணன்மலை *
புன்னைசெருந்தியொடு புனவேங்கையும்கோங்கும்நின்று *
பொன்னரிமாலைகள்சூழ் பொழில்மாலிருஞ்சோலையதே.
351 maṉṉu narakaṉtaṉṉaic * cūzh poki val̤aittu ĕṟintu *
kaṉṉi makal̤irtammaik * kavarnta kaṭalvaṇṇaṉ malai **
puṉṉai cĕruntiyŏṭu * puṉa veṅkaiyum koṅkum niṉṟu *
pŏṉari mālaikal̤ cūzh * pŏzhil māliruñ colaiyate (3)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

351. Thirumāliruncholai is the mountain of the dark ocean-colored god who killed Narakasura with his craftiness and married the maidens who were held captives. This Thirumālirunjolai is surrounded by beautiful groves where the flowers of blooming punnai, cherundi, punavengai and kongu trees look like golden garlands.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புன்னை புன்னை மரங்களும்; செருந்தியொடு செருந்தி மரங்களும்; புன வேங்கையும் காட்டு வேங்கை மரங்களும்; கோங்கும் நின்று கோங்கு மரங்களும்; பொன்னரி மாலைகள் பொன் மாலை போல்; சூழ் பொழில் சூழ்ந்திருக்கும் அழகிய; மாலிருஞ் சோலையதே திருமாலிருஞ் சோலயே; மன்னு செருக்குடன் இருந்த; நரகன் தன்னை நரகாசுரனை; சூழ் போகி கொல்லும் வகைகளை ஆராய்ந்து; வளைத்து எறிந்து வளைத்து கொன்று; கன்னி அவன் மணம் புரிய நினைத்திருந்த; மகளிர் கன்னிகைகளை; தம்மைக் கவர்ந்த தேவிமாராக்கின; கடல் வண்ணன் மலை கடல் நிறக் கண்ணன் மலை
puṉṉai punnai trees; cĕruntiyŏṭu cherundi trees; puṉa veṅkaiyum punavengai trees and; koṅkum niṉṟu kongu trees; pŏṉṉari mālaikal̤ look like golden garland; cūḻ pŏḻil on the beautiful; māliruñ colaiyate Thirumalirunjolai; kaṭal vaṇṇaṉ malai its the mountain of Kannan; val̤aittu ĕṟintu who killed; narakaṉ taṉṉai narakasuran; maṉṉu who had a lot of ego; cūḻ poki with a lot of caftiness; tammaik kavarnta and married; makal̤ir the maidens; kaṉṉi who were held captive