PAT 4.3.1

திருமாலிருஞ்சோலையின் மாட்சி ருக்மிணிப் பிராட்டியை மீட்டவன் மலை

349 உருப்பிணிநங்கைதன்னைமீட்பான் தொடர்ந்தோடிச்சென்ற *
உருப்பனையோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்டஉறைப்பன்மலை *
பொருப்பிடைக்கொன்றைநின்று முறியாழியும்காசும்கொண்டு *
விருப்பொடுபொன்வழங்கும் வியன்மாலிருஞ்சோலையதே. (2)
349 ## uruppiṇi naṅkaitaṉṉai mīṭpāṉ * tŏṭarntu oṭic cĕṉṟa *
uruppaṉai oṭṭik kŏṇṭiṭṭu * uṟaittiṭṭa uṟaippaṉ malai **
pŏruppiṭaik kŏṉṟai niṉṟu * muṟi āzhiyum kācum kŏṇṭu *
viruppŏṭu pŏṉ vazhaṅkum * viyaṉ māliruñ colaiyate (1)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

349. This mountain(Thirumāliruncholai) is the abode of Lord Krishna, who defeated Rukman, who came chasing the Lord to take his sister back. Here laburnum trees shower golden flowers that look like golden coins and rings given wholeheartedly.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொன்றை கொன்றை மரங்களாலான; பொருப்பிடை மலையிலே; நின்று நின்று; பொன் பொன்மயமான; முறி ஆழியும் மோதிரங்கள் போன்ற பூ நரம்புகளையும்; பொன் காசும் பொற்காசு போன்ற பூவிதழ்களையும்; கொண்டு வாரிக்கொண்டு; விருப்பொடு விருப்பத்தோடு; வழங்கும் வாரி வழங்கும்; வியன் வியக்கத்தக்க; மாலிருஞ் சோலை திருமாலிருஞ்சோலை; அதே அம்மலையே; உருப்பிணி நங்கைதன்னை ருக்மிணிப் பிராட்டியை; மீட்பான் மீட்டுக்கொண்டு போவதாக; தொடர்ந்து பின் தொடர்ந்து; ஓடிச்சென்ற ஓடிவந்த; உருப்பனை உருப்பன் என்றவனை; ஓட்டிக்கொண்டு இட்டு ஓட்டிப் பிடித்துக்கொண்டு (தேர்த்தட்டிலே) இருத்தி; உறைத்திட்ட (அவனைப்) பரிபவப் படுத்தின; உறைப்பன் மலை மிடுக்கை உடைய கண்ணபிரான் எழுந்தருளுயிருக்கிற மலை
viyaṉ it is the astronishing; māliruñ colai Thirumalirunjolai; pŏruppiṭai that has; niṉṟu the standing; kŏṉṟai laburnum trees; kŏṇṭu that carry; viruppŏṭu and willingly; vaḻaṅkum offer; muṟi āḻiyum broken gold rings and; pŏṉ kācum coins; pŏṉ made of gold; ate its that mountain; oṭiccĕṉṟa that came running; tŏṭarntu behind; mīṭpāṉ to rescue; uruppiṇi naṅkaitaṉṉai Rukimini devi