PAT 3.6.1

கண்ணன் வேய்ங்குழலூதிய சிறப்பு குழலிசையில் மயங்கிய கோவலர் சிறுமியர்

275 நாவலம்பெரியதீவினில்வாழும்
நங்கைமீர்கள்! இதுஓரற்புதம்கேளீர் *
தூவலம்புரியுடையதிருமால்
தூயவாயில்குழலோசைவழியே *
கோவலர்சிறுமியர்இளங்கொங்கை
குதுகலிப்பஉடலுளவிழ்ந்து * எங்கும்
காவலும்கடந்துகயிறுமாலையாகி
வந்துகவிழ்ந்துநின்றனரே. (2)
275 ## nāvalam pĕriya tīviṉil vāzhum * naṅkaimīrkal̤ itu or aṟputam kel̤īr *
tū valampuri uṭaiya tirumāl * tūya vāyil kuzhal-ocai vazhiye **
kovalar ciṟumiyar il̤aṅ kŏṅkai kutukalippa * uṭal ul̤-avizhntu * ĕṅkum
kāvalum kaṭantu kayiṟumālai āki * vantu kavizhntu niṉṟaṉare (1)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

275. O beautiful girls of this wide world, hear a wonderful thing! When Thirumāl with a white valampuri conch in his hand plays the flute with his divine lips, the cowherd girls with young breasts are excited by the melody, shiver and run away from their houses where they are guarded. Untying the ropes that bind them and putting them on their necks as if they are garlands. shyly they come and surround him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாவலம் நாவல் மரங்கள் நிறைந்த; பெரிய தீவினில் தீவாகிய ஜம்பூ த்வீபத்தில்; வாழும் நங்கைமீர்கள்! வாழும் பெண்களே!; இது ஓர் அற்புதம் கேளீர்! ஓர் ஆச்சரியமான விஷயம் கேளுங்கள்; தூ வலம்புரி தூய்மையான வலம்புரிச் சங்கை; உடைய பாஞ்ச சன்னியத்தையுடைய; திருமால் கண்ணன்; தூய வாயில் குழல் திரு வாயில் அழகிய புல்லாங்குழல்; ஓசை வழியே ஓசை மூலமாக; கோவலர் சிறுமியர் ஆயர் சிறுமியருடைய; இளங் கொங்கை குதுகலிப்ப உள்ளம் மகிழ்ச்சியடைய; உடல் உள் உடலும் உள்ளமும்; அவிழ்ந்து தன் வசத்திலில்லாமல்; எங்கும் காவலும் கடந்து காவல் கட்டுப்பாடுகளைக்கடந்து; கயிறு மாலை கயிற்றில் தொடுத்த; ஆகி வந்து பூமாலை போல் வந்து; கவிழ்ந்து கண்ணனைக் கண்டு வெட்கி தலை கவிழ்ந்து; நின்றனரே நின்றனர்
vāḻum naṅkaimīrkal̤! oh girls; pĕriya tīviṉil living in the island called jambu dweep that is; nāvalam filled with naval trees; itu or aṟputam kel̤īr! listen to this surprising fact; tirumāl Kannan; tū valampuri with pure white valampuri conch; uṭaiya called panchajanyam; tūya vāyil kuḻal is playing a flute; ocai vaḻiye and the music; il̤aṅ kŏṅkai kutukalippa excited; kovalar ciṟumiyar the young girls of Aiyarpadi; uṭal ul̤ both body and mind being; aviḻntu not in control; ĕṅkum kāvalum kaṭantu they untied the ropes that bind them; kayiṟu mālai and wore it on the neck; āki vantu as a garland; kaviḻntu they felt shy by seeing Kannan and; niṉṟaṉare stood by Him